IPL 2026: சஞ்சு, ஆயுஷ் தொடக்கம்.. மிடில் ஆர்டரில் தோனியின் மிரட்டல் அடி.. வலுவான சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
CSK Playing XI: 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 6வது பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. இம்முறை, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் பல இளம் மற்றும் அனுபவ வீரர்கள் களமிறங்குகின்றன. ஏலங்கள் மற்றும் பரிமாற்றங்கள் மூலம் அணி சில சிறந்த வீரர்களைச் சேர்த்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2026) 19வது பதிப்பு வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் தொடங்குகிறது. போட்டியில் களமிறங்க 10 அணிகளும் தயாராக உள்ளன. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) தனது 6வது பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. இம்முறை, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் பல இளம் மற்றும் அனுபவ வீரர்கள் களமிறங்குகின்றன. ஏலங்கள் மற்றும் பரிமாற்றங்கள் மூலம் அணி சில சிறந்த வீரர்களைச் சேர்த்துள்ளது. கடந்த 2025 சீசனில் புள்ளி அட்டவணையில் கடைசி இடத்தைப் பிடித்த இந்த அணி, இம்முறை வலுவாகத் தெரிகிறது. சென்னை அணி தனது முதல் போட்டியை 2026 மார்ச் 30ம் தேதி விளையாட உள்ளது. முதல் போட்டியில் களமிறக்கக்கூடிய 11 வீரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இனி ஒரு நிமிடத்தை கூட வீணடிக்கக்கூடாது… ஆர்சிபி அணியை மோட்டிவேட் செய்த விராட் கோலி!
சிஎஸ்கே-யின் புதிய தொடக்க ஜோடி:
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு புதிய தொடக்க ஜோடியைக் களமிறக்கக்கூடும். 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிக்கு பெற்று கொடுத்த சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கலாம். இவருடன், கடந்த சீசனில் முத்திரை பதித்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன் கேப்டன் ஆயுஷ் மத்ரேவும் களமிறங்கினால் முதல் பந்திலிருந்தே அதிரடி வெடிக்கும்.
மிடில் ஆர்டரில் யார் களம்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 3-வது இடத்தில் களமிறங்கி ரன் குவித்து வரும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முக்கிய பங்கு வகிக்கலாம். உள்ளூர் கிரிக்கெட்டில் ஒரு கடினமான பயணத்திற்குப் பிறகு ருதுராஜ் களமிறங்குகிறார். அவரைத் தொடர்ந்து 4-வது இடத்தில், சுழற்பந்துக்கு எதிராக சிக்ஸர்களை விளாசுவதிலும், மிடில் ஓவர்களில் விரைவாக ரன் குவிப்பதிலும் பெயர் பெற்ற சிவம் துபே களமிறங்கக்கூடும்.
5வது இடத்தில் டெவால்ட் பிரெவிஸ்:
5-வது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் ‘ஜூனியர் ஏபி டி வில்லியர்ஸ்’ என்று அழைக்கப்படும் டிவால்ட் பிரெவிஸ் களமிறங்கி ஆக்ரோஷமாக பேட்டிங் செய்து எதிரணியை சிதைக்கலாம். 6-வது இடத்தில், மினி-ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 14.20 கோடிக்கு வாங்கப்பட்ட இளம் விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மாவுக்கு இடம் கிடைக்கலாம். அதனை தொடர்ந்து எம்.எஸ். தோனி 7-வது இடத்திலும், ரூ. 14.20 கோடிக்கு வாங்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் பிரசாந்த் வீர் 8-வது இடத்திலும் களமிறங்கலாம்.
பந்துவீச்சில் யார் இறங்குவார்கள்?
9-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது, சென்னையின் சுழலுக்குச் சாதகமான ஆடுகளங்களில் எதிரணிக்கு பேரழிவை ஏற்படுத்தலாம். துல்லியமான பந்துவீச்சிற்காக அறியப்பட்ட மாட் ஹென்றி மற்றும் கலீல் அகமது ஆகியோர் வேகப்பந்து வீச்சுத் துறையில் கெத்து காட்டலாம்.
ALSO READ: சாதனைகளை படைக்கும் நோக்கில் சஞ்சு சாம்சன்.. ஐபிஎல் 2026 சாதகமாக அமையுமா?
ஐபிஎல் 2026-க்கான சென்னை சூப்பர் கிங்ஸின் சிறந்த பிளேயிங் 11:
சஞ்சு சாம்சன், ஆயுஷ் மத்ரே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சிவம் துபே, கார்த்திக் சர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், பிரசாந்த் வீர், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), மாட் ஹென்றி, நூர் அகமது, கலீல் அகமது.
இம்பேக்ட் வீரர்கள் : ஜேமி ஓவர்டன், மாட் ஷார்ட், அன்ஷுல் காம்போஜ்.