IPL 2026: பயிற்சியின்போது கால் வலி.. நடப்பதில் சிரமம்.. எம்.எஸ்.தோனி முழுமையாக விளையாடுவாரா?
MS Dhoni: உலக கிரிக்கெட்டில் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடுவதில் தோனியை விட வேகமானவர் யாரும் இல்லாத ஒரு காலம் இருந்தது. ஆனால் வயதாகும்போது, ஒரு கட்டத்தில் பின்வாங்குவது மிக மிக முக்கியம். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தோனி தனது கிட் பையுடன் மைதானத்தை விட்டு வெளியேறியபோது, அவரது உடல் முற்றிலும் சோர்ந்து போயிருந்தது.

மகேந்திர சிங் தோனி
ஐபிஎல் 2026 சீசனில் 44 வயதுக்கு மேல் ஆகியும் எம்.எஸ்.தோனி களமிறங்கும்போதெல்லாம் இந்தியாவில் உள்ள அனைத்து கிரிக்கெட் அரங்கமும் அதிர தொடங்கும். எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகி கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவரது புகழ் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை. மஞ்சள் ஜெர்சியில் மகேந்திர சிங் தோனி இன்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களின் உயிர்நாடியாக இருக்கிறார். வரவிருக்கும் ஐபிஎல் (IPL 2026) தொடரிலும் அவர் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஐபிஎல் 2026 சீசனில் எத்தனை போட்டிகளில் தோனி விளையாடுவார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தோனி இன்னும் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறாததால், சிஎஸ்கே அணியின் ஆடும் லெவனில் அவர் இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இப்போது எழும் கேள்வி வேறொன்று. காயம் காரணமாக அவதிபட்டு வரும் தோனி சிஎஸ்கே அணிக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா?
ALSO READ: சஞ்சு, ஆயுஷ் தொடக்கம்.. மிடில் ஆர்டரில் தோனியின் மிரட்டல் அடி.. வலுவான சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
தோனியின் உடற்தகுதி:
MS Dhoni struggling while walking after a practice session.
I think this is his last season, as age seems to be catching up with him. pic.twitter.com/ZaR17O7O32
— Sonu (@Cricket_live247) March 20, 2026
சிஎஸ்கே அணியின் பயிற்சிக்கு பிறகு, எம்.எஸ். தோனி மிகவும் அசௌகரியமான முறையில் மைதானத்தை விட்டு வெளியேறுவதை ஒரு சில வீடியோகளில் தெரிந்தது. அதில், தோனியால் ஒழுங்காக நடக்கக்கூட முடியவில்லை. தங்களுக்குப் பிரியமான தோனியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். அனைவரும் கேலரியில் இருந்து தோனியின் பயிற்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பேட்டிங்கில் பல கண்கவர் ஷாட்களை விளையாடிய போதிலும், எம்.எஸ்.தோனிக்கு முக்கியப் பிரச்சினை இப்போது அவரது உடற்தகுதியாக மாறியுள்ளது.
உலக கிரிக்கெட்டில் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடுவதில் தோனியை விட வேகமானவர் யாரும் இல்லாத ஒரு காலம் இருந்தது. ஆனால் வயதாகும்போது, ஒரு கட்டத்தில் பின்வாங்குவது மிக மிக முக்கியம். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தோனி தனது கிட் பையுடன் மைதானத்தை விட்டு வெளியேறியபோது, அவரது உடல் முற்றிலும் சோர்ந்து போயிருந்தது. இருப்பினும், தன் முகத்தில் அந்த மாயாஜாலப் புன்னகையுடன் ரசிகர்களுக்கு கையசைத்து நடந்து சென்றார். வீடியோ முடிவில் எம்.எஸ்.தோனி கஷ்டப்பட்டு நடந்து சென்றதையும் காண முடிந்தது.
ALSO READ: சேப்பாக்கத்தில் குவிந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்கள்.. அடியெடுத்து வைத்த தோனி.. அதிர்ந்த அரங்கம்!
ஐபிஎல் போன்ற ஒரு போட்டி நிறைந்த கிரிக்கெட் மேடையில், 100 சதவிகித உடற்தகுதியுடன் இல்லாமல் களமிறங்குவது நியாயமற்றது. ரசிகர்கள் எவ்வளவு அன்பு, எவ்வளவு உணர்ச்சியை வெளிப்படுத்தினாலும், வயது ஒரு கட்டத்திற்கு மேல் இடம் கொடுக்காது. கடந்த 2025 சீசனில், ஒன்று அல்லது இரண்டு போட்டிகளைத் தவிர, அவரால் அணிக்கு எம்.எஸ்.தோனிக்கு எந்த வகையிலும் பங்களிக்க முடியவில்லை. அதன்படி, ஐபிஎல் 2026 சீசன் தொடங்கும் போது தோனி விளையாடுவாரா என்ற கேள்வி எழுகிறது. அவரால் எல்லாப் போட்டிகளிலும் விளையாட முடியாவிட்டால், அவருக்கு மாற்றாக சஞ்சு சாம்சன் நிச்சயமாக சிஎஸ்கே அணியில் பங்களிப்பார்.