IPL 2026: 13/6.. பவர்பிளேவில் பரிதாபம்.. மோசமான சாதனை படைத்த டெல்லி!

IPL Lowest Powerplay Score: ஐபிஎல் தொடரில் அறிமுகமான சாஹில் பராக், புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் டக் அவுட் ஆனதன் மூலம் டெல்லி அணிக்கு முதல் அடி விழுந்தது. அடுத்ததாக கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 150 ரன்களை பதிவு செய்த கே.எல். ராகுல், ஜோஷ் ஹேசில்வுட்டின் பந்துவீச்சில் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், சமீர் ரிஸ்வி ஜோஷ் ஹேசில்வுட்டின் பந்துவீச்சில் கோல்டன் டக் அவுட் ஆனார்.

IPL 2026: 13/6.. பவர்பிளேவில் பரிதாபம்.. மோசமான சாதனை படைத்த டெல்லி!

டெல்லி கேப்பிட்டல்ஸ்

Published: 

27 Apr 2026 21:02 PM

 IST

ஐபிஎல் 2026-இன் (IPL 2026) 39-வது லீக் போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 27ம் தேதி அருண் ஜேட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் (Delhi Capitals) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி, ஐபிஎல் வரலாற்றிலேயே குறைந்தபட்ச பவர்பிளே ஸ்கோருக்கான சாதனையைப் படைத்தது. டெல்லியின் முதல் ஓவர் முதல் பந்திலேயே ஆர்சிபி பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் டெல்லி தொடக்க பேட்ஸ்மேன் சாஹில் விக்கெட்டை எடுத்தார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து விழ முதல் 6 ஓவர்களில், டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ALSO READ: களத்தில் நடுவருடன் வாக்குவாதம்.. அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு அபராதம் விதிப்பு!

முன்னதாக, ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயின் குறைந்தபட்ச ஸ்கோர் 14 ரன்களாக இருந்தது. இரண்டு முறை, பவர்பிளேயின் மொத்த ஸ்கோர் 14 ரன்களாக இருந்தது. 2022-ல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 3 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்தது. இதற்கு முன்பு, 2009-ல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 2 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது, ​​டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த மோசமான பட்டியலில் 13 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த பவர்பிளே ஸ்கோர்

டெல்லி கேப்பிட்டல்ஸ் – 13/6 –  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி (2026)
ராஜஸ்தான் ராயல்ஸ் – 14/2 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கேப் டவுன் (2009)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 14/3 – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புனே (2022)
சென்னை சூப்பர் கிங்ஸ் – 15/2 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா (2011)
சென்னை சூப்பர் கிங்ஸ் – 16/1 – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ராய்ப்பூர் (2015)

பவர்பிளேயில் ஆட்டமிழந்த 6 பேட்ஸ்மேன்கள் யார்?


ஐபிஎல் தொடரில் அறிமுகமான சாஹில் பராக், புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் டக் அவுட் ஆனதன் மூலம் டெல்லி அணிக்கு முதல் அடி விழுந்தது. அடுத்ததாக கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 150 ரன்களை பதிவு செய்த கே.எல். ராகுல், ஜோஷ் ஹேசில்வுட்டின் பந்துவீச்சில் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், சமீர் ரிஸ்வி ஜோஷ் ஹேசில்வுட்டின் பந்துவீச்சில் கோல்டன் டக் அவுட் ஆனார்.

ALSO READ: தலையில் ஏற்பட்ட காயம்.. இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக லுங்கி என்கிடி விளையாடுவாரா?

புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் வெறும் 5 ரன்களுக்கு டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். இதன்மூலம், டெல்லி அணி தனது 4வது விக்கெட்டை இழந்தது. கேப்டன் அக்சர் படேல் ரன் எதுவும் எடுக்காமல் திரும்பியதால், அணி தனது 5வது விக்கெட்டை இழந்தது. 9 பந்துகளில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்த நிதிஷ் ராணா 6வது விக்கெட்டை இழந்தார்.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?