IPL 2026: டெல்லியில் மோதும் டெல்லி-பஞ்சாப் அணிகள்.. பிட்ச் எப்படி இருக்கும்..? பிளேயிங் லெவன் விவரம்!
DC vs PBKS Pitch Report: ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதற்கிடையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அக்சர் படேல் தலைமையிலான அணி, இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அக்ஸர் படேல் Vs ஷ்ரேயாஸ் ஐயர்
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 ஏப்ரல் 25ம் தேதி இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி, டெல்லியின் சொந்த மைதானமான அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணிகளுக்கு இடையே மதியம் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, இதுவரை தோல்வியடையாமல் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதற்கிடையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அக்சர் படேல் தலைமையிலான அணி, இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ALSO READ: அதிருப்தியில் அணி நிர்வாகம்.. கேப்டன் ஹர்திக்கை மாற்றுகிறதா மும்பை இந்தியன்ஸ்?
நேருக்கு நேர் மோதலில் யார் முன்னிலை?
ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தங்களின் நேருக்கு நேர் போட்டியில் சமநிலையில் உள்ளன. இரு அணிகளும் இதுவரை 34 போட்டிகளில் விளையாடியுள்ளன. இவற்றில் பஞ்சாப் 17 போட்டிகளிலும், டெல்லி 17 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
டெல்லியில் இணைந்த இங்கிலாந்து ஆல்-ரவுண்டர்:
இங்கிலாந்தின் சுழற்பந்து ஆல்-ரவுண்டர் ரேஹான் அகமது, இந்தப் போட்டிக்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார். இருப்பினும், மிட்செல் ஸ்டார்க் தற்போது அணியில் இடம்பெறவில்லை. ரேஹான் அகமது அணியில் இணைந்துவிட்டார், ஆனால் ஸ்டார்க் இன்னும் வந்து சேரவில்லை. ஐபிஎல் தொடரில் பங்கேற்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஸ்டார்க் வருகின்ற 2026 மே 1 ம் தேதி முதல் களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் ஜேட்லி ஸ்டேடியத்தின் பிட்ச் எப்படி..?
டெல்லியின் அருண் ஜேட்லி ஸ்டேடியத்தின் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமானதாகும். இது ஒரு சிறிய மற்றும் சமதள மைதானம் என்பதால், ரன்கள் எடுப்பது எளிது. இது ஒரு பிற்பகல் போட்டி என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச முடிவு செய்யலாம்.
போட்டி கணிப்பு
ஐபிஎல் 2026 சீசனில் 35வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சாதகமான நிலை உள்ளது. இருப்பினும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு சொந்த மைதானத்தில் விளையாடும் அனுகூலமும் உள்ளது. சேஸிங் செய்யும் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே அதிகம். எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உத்தேச ஆடும் XI:
பதும் நிசங்கா, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, சமீர் ரிஸ்வி, டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அஷுதோஷ் சர்மா, அக்சர் படேல் (கேப்டன்), குல்தீப் யாதவ், லுங்கி என்கிடி, முகேஷ் குமார், டி நடராஜன்
இம்பாக்ட் பிளேயர் – அகிப் நபி தர்
ALSO READ: ஐபிஎல் 2026: சிஎஸ்கே ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோவின் அதிரடி சலுகை
பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் XI:
பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கோனாலி, நேஹல் வதேரா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அர்ஷதப் சிங்
இம்பாக்ட் பிளேயர் – விஜய் குமார் வைஷாக்