IPL 2026: முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் சிஎஸ்கே பந்துவீச்சாளர்..? போட்டோ போட்டு கிண்டலடித்த அஸ்வின்!

CSK Anshul Kamboj: தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் விஜய், சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பொறுப்பேற்றார். அப்போது அவரது பதவியேற்பு விழாவின்போது, ​​மேடையில் நின்றுகொண்டிருந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி, சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜை அச்சு அசலாக ஒத்திருந்த புகைப்படம் ஒன்று வைரலானது.

IPL 2026: முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் சிஎஸ்கே பந்துவீச்சாளர்..? போட்டோ போட்டு கிண்டலடித்த அஸ்வின்!

அன்ஷுல் கம்போஜ்

Published: 

11 May 2026 14:59 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 மே 10ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இலக்க துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் 209 ரன்களை கடந்து வென்றது. இருப்பினும், இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ஒரு வேடிக்கையான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் விஜய், சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பொறுப்பேற்றார். அப்போது அவரது பதவியேற்பு விழாவின்போது, ​​மேடையில் நின்றுகொண்டிருந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜை அச்சு அசலாக ஒத்திருந்த புகைப்படம் ஒன்று வைரலானது.

ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம்.. ஜெய்ஸ்வால் சாதனையை சமன் செய்த உர்வில் படேல்!

புகைப்படம் வெளியான உடனேயே, சமூக வலைதளங்களில் சிஎஸ்கே ரசிகர்கள், ”அன்ஷுல் கம்போஜ் காவல் பணிக்கு வந்துவிட்டார்” என்று கூறத் தொடங்கினர். அந்தப் புகைப்படம் விரைவாக வைரலாகி, ஏராளமான மீம்கள் உருவாகி வைரலாக தொடங்கியது. இதற்கிடையில், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் நகைச்சுவையாக இதை பதிவிட்டிருந்தார்.

அஸ்வினின் வைரல் பதிவு:


இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது, ”கடமைக்குத்தான் எப்போதும் முதல் இடம், ஆனால் போட்டி நாளன்று அது சற்று அதிகமாகிவிடுகிறது. அன்ஷுல் கம்போஜ், சீக்கிரம் சேப்பாக்கிற்கு ஒரு வண்டியைப் பிடித்துச் செல்லுங்கள், இன்றைக்கு மிகப்பெரிய ஒரு போட்டி உள்ளது” என்று தெரிவித்திருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வினின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் விரைவாக வைரலானது, ரசிகர்களும் அதை மிகவும் ரசித்தனர்.

ALSO READ: கடைசி நேரத்தில் பயம் காட்டிய லக்னோ.. 209 ரன்கள் இலக்கை விரட்டி சிஎஸ்கே வெற்றி!

அன்ஷுல் கம்போஜ் எங்கே இருந்தார்..?

சிஎஸ்கே அணியும் இந்தக் கொண்டாட்டத்தில் இணைந்து, அன்ஷுல் கம்போஜ் தொடர்பான ஒரு வீடியோவைப் பகிர்ந்து, ”கவலைப்படாதீர்கள், அன்ஷுல் கம்போஜ் இங்கே இருக்கிறார்” என்று எழுதியது. அந்த வீடியோவில், அன்ஷுல் கம்போஜ் பந்துவீசுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இது அன்ஷுல் கம்போஜ் சிஎஸ்கே அணியுடன் போட்டிக்காகத் தயாராவதில் மும்முரமாக இருந்ததைத் தெளிவுபடுத்தியது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி