IPL 2026: தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. தமிழில் பெயர் எழுதி மகிழ்ந்த சிஎஸ்கே வீரர்கள்.. வைரலாகும் வீடியோ!

Chennai Super Kings Players: சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன், உள்ளே வந்த எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களிடம் தமிழில் உள்ள உங்களது வீரர்களை கண்டறியும்படி தெரிவித்தார். அப்போது எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நூர் அகமது உள்ளிட்ட வீரர்கள் தங்களது தமிழ் பெயர்களை உடனடியாக கண்டறிந்தனர்.

IPL 2026: தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. தமிழில் பெயர் எழுதி மகிழ்ந்த சிஎஸ்கே வீரர்கள்.. வைரலாகும் வீடியோ!

எம்.எஸ்.தோனி - ருதுராஜ் கெய்க்வாட்

Published: 

14 Apr 2026 17:25 PM

 IST

உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் 2026 ஏப்ரல் 14ம் தேதியான இன்று சித்திரை மாதத்தின் தொடக்கத்தை தமிழ் புத்தாண்டாக (Tamil New Year) கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் தமிழர்கள் புதிய தொடக்கங்கள், செழிப்பு மற்றும் நல்ல சிந்தனைகளை தரும் என்று நினைக்கிறார்கள். சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பலரும் இந்த பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடி வரும் வேளையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களும் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழ் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) வீரர்கள் தங்களது பெயர்களை தமிழில் கண்டறிந்தும், தமிழில் எழுதியும் மகிழ்ந்தனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ: கேகேஆர் அணிக்கு எதிராக விளையாடும் தோனி..? வெளியேறும் சர்பராஸ் கான்!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மகிழ்ச்சி:


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 14ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள வந்தனர். அப்போது, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் அமைந்துள்ள வீரர்கள் அறை ஒன்றில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்கள் பெயரும் ஒரு பெரிய வெள்ளை நிற போர்டில் எழுதப்பட்டிருந்தது.

ALSO READ: எம்.எஸ்.தோனி களமிறங்குவது எப்போது..? ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்!

அப்போது, அங்கிருந்த சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன், உள்ளே வந்த எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களிடம் தமிழில் உள்ள உங்களது வீரர்களை கண்டறியும்படி தெரிவித்தார். அப்போது எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நூர் அகமது உள்ளிட்ட வீரர்கள் தங்களது தமிழ் பெயர்களை உடனடியாக கண்டறிந்தனர். இருப்பினும், மற்ற சில வீரர்கள் தவறாகவும், தாமதமாகவும் தங்களது தமிழ் பெயர்களை குறிப்பிட்டனர். தொடர்ச்சியாக அனைத்து வீரர்களும் தங்களது தமிழ் பெயர்களுக்கு கீழ் அவர்களது பெயர்களை தமிழில் எழுதியும் மகிழ்ந்தனர். தற்போது இந்த வீடியோவை சிஎஸ்கே ரசிகர்கள் அதிகளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு வீரர்கள் பட்டியல்:

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, டெவால்ட் பிரேவிஸ், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, அன்ஷுல் காம்போஜ், குர்ஜபனீத் சிங், கலீல் அகமது, மேத்யூ ஷார்ட், அக்கேல் ஹொசைன், கார்த்திக் வெஷ்ரி, மார்ஷண் ஷர்மா, பிரஷான் ஷர்மா, தோனி, ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் சாஹர், ஸ்பென்சர் ஜான்சன், முகேஷ் சவுத்ரி, உர்வில் படேல், அமன் கான், ஜாக்கரி ஃபௌல்க்ஸ்.

Follow Us
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்