IPL 2026: சஞ்சு சாம்சனை எடுக்க திட்டம்! அஸ்வினை விட்டுக்கொடுக்கிறதா சிஎஸ்கே..? வெளியான தகவல்!

Chennai Super Kings Trade Rumors: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2026 சீசனுக்காக ஒரு பெரிய வர்த்தகத்தைத் திட்டமிட்டு வருகிறது. சஞ்சு சாம்சனைப் பெறுவதற்கு ராஜஸ்தான் ராயல்ஸிடம் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் கூடுதல் தொகையை வழங்க CSK திட்டமிடுகிறது எனக் கூறப்படுகிறது. சிவம் துபே இந்த பரிமாற்றத்தில் ஈடுபடவில்லை. இந்த வர்த்தகம் இரு அணிகளின் அமைப்பிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சாம்சனின் வருகை CSK-வின் பேட்டிங்கை வலுப்படுத்தும்.

IPL 2026: சஞ்சு சாம்சனை எடுக்க திட்டம்! அஸ்வினை விட்டுக்கொடுக்கிறதா சிஎஸ்கே..? வெளியான தகவல்!

சஞ்சு சாம்சன் - ரவிச்சந்திரன் அஸ்வின்

Published: 

28 Jun 2025 11:38 AM

ஐபிஎல் 2026 (IPL 2026) சீசனுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) ஒரு பெரிய வர்த்தகத்தை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஐபிஎல் 19வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சன் (Sanju Samson) இடம்பெறலாம் என்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின்  மற்றும் சிவம் துபே ஆகியோர் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு சாத்தியம் இல்லை என்று தெரிந்தாலும், அஸ்வினுடன் நெருங்கிய நண்பரான பிரசன்னா அகோரம், இந்த பரிமாற்றம் செய்ய இருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரசன்னா அகோரமின் கூற்றுப்படி, சிஎஸ்கே அணி ஒரு இந்திய ஆஃப்-ஸ்பின்னர் மற்றும் ஒரு இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை டாப் ஆர்டர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மாற்ற திட்டமிட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்:

10 ஆண்டுகளுக்கு பிறகு 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பினார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அவரது செயல்திறன் மோசமாக இருந்தது. கடந்த 2025 ஐபிஎல் சீசனில் ரவிச்சந்திரன் அஸ்வின் 9 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் ஷிவம் துபே ஒரு முக்கிய அங்கமாக இருந்தார். இருப்பினும், ஐபிஎல் 2025 சீசனில் துபேவால் 14 போட்டிகளில் வெறும் 357 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால், இந்த மாற்றங்களை நிகழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் விரும்புவதாக கூறப்படுகிறது.

மாறுகிறாரா சஞ்சு சாம்சன்..?


அதேநேரத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சன் 2025 சீசனில் கலவையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். காயம் காரணமாக அவர் பல போட்டிகளைத் தவறவிட்டார், மேலும் ரியான் பராக் குறைந்தது ஏழு ஆட்டங்களுக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சாம்சனுக்கும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் வதந்திகள் இருந்தன, இது அணி மாற்றத்திற்கான மற்றொரு காரணமாக இருக்கலாம். இந்த விரிசலை அணி நிர்வாகம் மறுத்தாலும், இந்த சூழ்நிலை சாம்சனின் எதிர்காலம் குறித்த மேலும் ஊகங்களைத் தூண்டியுள்ளது.

இந்தப் பரிமாற்றம் நடந்தால், அது இரு அணிகளுக்கும் ஒரு பெரிய மாற்றமாக இருக்கும். சஞ்சு சாம்சனின் வருகை, அவரது அனுபவத்தாலும், ஆக்ரோஷமான பாணியாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாப்-ஆர்டர் பேட்டிங்கை மேம்படுத்தக்கூடும்.