IPL 2026: ராஜநடை போடும் ராஜஸ்தான்.. பரிதாப நிலையில் சென்னை.. ரீசெண்ட் புள்ளிகள் பட்டியல்!

IPL 2026 Points Table: ஐபிஎல் 2026 புள்ளி பட்டியலில் நேற்று அதாவது 2026 ஏப்ரல் 7ம் தேதி நடைபெற்ற போட்டிக்குப் பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது. அதன் ரன் விகிதம் -0.715 ஆகும்.

IPL 2026: ராஜநடை போடும் ராஜஸ்தான்.. பரிதாப நிலையில் சென்னை.. ரீசெண்ட் புள்ளிகள் பட்டியல்!

சுப்மன் கில் - ருதுராஜ் கெய்க்வாட் - ரியான் பராக்

Published: 

08 Apr 2026 15:02 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 ஏப்ரல் 7ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியும் கவுகாத்தி மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ராஜஸ்தான் ராயல்ஸின் வெற்றிக்குப் பிறகு, ஐபிஎல் 2026 சீசனின் புள்ளி பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் கடைசி இடத்தில் உள்ளது.  அதே சமயம், ஒரே ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் முதல் 5 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன. கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில், 11 ஓவர்கள் கொண்ட பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ALSO READ: 5 ஓவர்களாக குறைக்கப்படும் போட்டி.. மும்பை – ராஜஸ்தான் போட்டி நடைபெறுமா?

புள்ளிகள் பட்டியலில் யார் முதலிடம்..?

ஐபிஎல் 2026 புள்ளி பட்டியலில் நேற்று அதாவது 2026 ஏப்ரல் 7ம் தேதி நடைபெற்ற போட்டிக்குப் பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது. அதன் ரன் விகிதம் -0.715 ஆகும். அதேநேரத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மழை காரணமாக கிடைத்த ஒரே ஒரு புள்ளியுடன் 2 போட்டிகளில் தோல்விகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. கேகேஆரின் ரன் ரேட் தற்போது -1.964 ஆகவுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து 9-வது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரன் ரேட் -0.424 ஆகவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து -2.517 ரன் ரேட்டுடன் கடைசி இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியதன் மூலம் இந்தச் சாதனையை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று, 2.403 என்ற ரன் ரேட்டுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் அணி ஒருமுறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 3 போட்டிகளுக்குப் பிறகு 5 புள்ளிகளுடன் 0.637 என்ற ரன் ரேட்டுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ALSO READ: முதல் வெற்றியை நோக்கி குஜராத்.. ஆதிக்கம் செலுத்துமா டெல்லி? பிளேயிங் லெவன் எப்படி?

நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தாங்கள் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, 2.501 ரன் ரேட்டுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இருப்பினும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் தாங்கள் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தாலும், ஆர்சிபியை விட குறைவான ரன் ரேட் காரணமாக புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. டெல்லியின் ரன் ரேட் 1.170 ஆகும். ஐபிஎல் 2026 புள்ளிப் பட்டியலில் முதல் ஐந்து அணிகளில், 2016-ஆம் ஆண்டின் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5-வது இடத்தில் உள்ளது. அதாவது ஹைதராபாத் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று, 0.275 ரன் ரேட்டுடன் உள்ளனர்.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?