India Cricket Sponsorship: 1993 முதல் 2025 வரை.. இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர் யார்..? முழு லிஸ்ட்!

Indian Cricket Team Sponsors List: அப்பல்லோ டயர்ஸ் ஒவ்வொரு போட்டிக்கும் பிசிசிஐக்கு ரூ.4.5 கோடி வழங்கும். முன்னதாக, ட்ரீம் 11 பிசிசிஐக்கு ரூ.4 கோடி வழங்கியது. 2025 ஆசிய கோப்பையில் இந்திய அணி எந்த ஸ்பான்சரும் இல்லாமல் விளையாடுகிறது. இந்தநிலையில், இதுவரை இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக இருந்த நிறுவனங்களில் பட்டியலை தெரிந்துகொள்வோம்.

India Cricket Sponsorship: 1993 முதல் 2025 வரை.. இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர் யார்..? முழு லிஸ்ட்!

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்

Published: 

16 Sep 2025 19:01 PM

 IST

2025 ஆசிய கோப்பையின் நடுவின் இந்திய அணிக்கு (Indian Cricket Team) புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்போல்லோ டயர்ஸுடன் (Apollo Tyres) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 2027 வரை இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக இருக்கும். அப்பல்லோ டயர்ஸ் மூன்று ஆண்டுகளுக்கு பிசிசிஐக்கு ரூ.579 கோடியை வழங்கும். உண்மையில், சில காலத்திற்கு முன்பு இந்திய அரசு பந்தயம் தொடர்பான செயலிகளை தடை செய்தது. முன்னதாக, பிசிசிஐ (BCCI) ட்ரீம் 11 உடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டது. அப்பல்லோ டயர்ஸ் ஒவ்வொரு போட்டிக்கும் பிசிசிஐக்கு ரூ.4.5 கோடி வழங்கும். முன்னதாக, ட்ரீம் 11 பிசிசிஐக்கு ரூ.4 கோடி வழங்கியது. 2025 ஆசிய கோப்பையில் இந்திய அணி எந்த ஸ்பான்சரும் இல்லாமல் விளையாடுகிறது. இந்தநிலையில், இதுவரை இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக இருந்த நிறுவனங்களில் பட்டியலை தெரிந்துகொள்வோம்.

ஐடிசி லிமிடெட் (1993–2001):

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஐடிசி லிமிடெட், தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் ஹோட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்களை கொண்டுள்ளது. இந்த ஐடிசி லிமிடெட் கடந்த 1993ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக இருந்தது. அதன்படி, ஐடிசியின் பிராண்டுகளான வில்ஸ் மற்றும் ஐடிசி ஹோட்டல்களின் பெயர்கள் இந்திய அணியின் ஜெர்சியில் இடம் பெற்றிருந்தன.

ALSO READ: ஆசிய கோப்பையில் இந்திய அணி முதலிடத்தில் ஆதிக்கம்.. இலங்கை, பாகிஸ்தான் நிலைமை என்ன..? புள்ளிகள் பட்டியல் இதோ!

சஹாரா இந்தியா (2002–2013)

90 காலக்கட்டத்தில் பிறந்த கிரிக்கெட் ரசிகர்கள் சஹாராவை என்றுமே மறக்கமாட்டார்கள். இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக சஹாரா இந்தியா பரிவார் மிக நீண்ட ஆண்டு காலம் பயணித்தது. அதாவது, பிசிசிஐக்கும் சஹாராவிற்கும் இடையிலான ஒப்பந்தம் 2002ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை நீடித்தது. அன்றைய காலக்கட்டத்தில், சஹாரா இந்திய அணியின் ஒவ்வொரு சர்வதேச போட்டிக்கும் ரூ.3.34 கோடிக்கு மேல் செலவிட்டது. 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையையும் இந்திய அணி வென்றது. அந்த நேரத்தில், சஹாரா இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக இருந்தது.

ஸ்டார் இந்தியா (2014–2017)

இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனங்களில் ஒன்றான ஸ்டார் இந்தியா, கடந்த 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக இருந்தது. இந்திய ஊடகக் குழுமம் ஒவ்வொரு இருதரப்பு போட்டிக்கும் ரூ.1.92 கோடியும், ஐ.சி.சி போட்டிக்கு ரூ.61 லட்சமும் செலுத்தியதாக கூறப்படுகிறது.

ஒப்போ (2017–2019)

முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஒப்போ, 2017 முதல் 2019 வரை இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர் உரிமைகளை கொண்டிருந்தது. 2017ம் ஆண்டில், விவோ மொபைல்ஸை விட ஒப்போ ஸ்பான்சர்ஷிப்பை ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது. இது 5 ஆண்டுகளுக்கு ரூ.1,079 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.

ALSO READ: இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அப்போல்லோ டயர்ஸ்.. ஒரு போட்டிக்கு இவ்வளவு பணம் வழங்குமா..?

பைஜூஸ் (2019-2023)

2019ம் ஆண்டில் இந்திய அணியின் முந்தைய ஜெர்சி ஸ்பான்சரான ஒப்போவிடமிருந்து அனைத்துப் பொறுப்புகளையும் பைஜூஸ் ஏற்றுக்கொண்டது. அதிலிருந்து, 2023ம் ஆண்டு மார்ச் வரை பைஜூஸ் இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக இருந்தது.  இதன்பிறகே, இந்த உரிமையை ஆன்லைன் கேமிங் நிறுவனமான Dream 11 வாங்கியது.

Related Stories
India Cricket Sponsorship: இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அப்போல்லோ டயர்ஸ்.. ஒரு போட்டிக்கு இவ்வளவு பணம் வழங்குமா..?
சூதாட்ட செயலி வழக்கு.. உத்தப்பா, யுவராஜ் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!
Asia Cup 2025 Points Table: ஆசிய கோப்பையில் இந்திய அணி முதலிடத்தில் ஆதிக்கம்.. இலங்கை, பாகிஸ்தான் நிலைமை என்ன..? புள்ளிகள் பட்டியல் இதோ!
2025 Asia Cup: ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி.. உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்..!
விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது – காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேச்சு!
India – Pakistan: கைக்குலுக்காத இந்திய வீரர்கள்.. அம்பயர் மீது கோபம் கொண்ட பிசிபி.. புறக்கணிக்கும் பாகிஸ்தான்!