IND vs SA 2nd Test: தோல்வியை நோக்கி இந்திய அணி.. இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா கடைசியாக டெஸ்ட் தொடரை எப்போது வென்றது?

India vs South Africa Test Series: தற்போது நடைபெற்று வரும் குவஹாத்தி டெஸ்டிலும் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி புதிய வரலாறு படைக்கும். அதாவது குவஹாத்தி பர்ஷபரா ஸ்டேடியத்திலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால், 26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா அணி வெல்லும்.

IND vs SA 2nd Test: தோல்வியை நோக்கி இந்திய அணி.. இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா கடைசியாக டெஸ்ட் தொடரை எப்போது வென்றது?

தென்னாப்பிரிக்கா அணி

Published: 

25 Nov 2025 14:45 PM

 IST

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் (India vs South Africa 2nd Test) கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முன்னதாக, இரு அணிகளுக்கு இடையிலான கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை (Indian Cricket Team) வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. தற்போது நடைபெற்று வரும் குவஹாத்தி டெஸ்டிலும் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி புதிய வரலாறு படைக்கும். அதாவது குவஹாத்தி பர்ஷபரா ஸ்டேடியத்திலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால், 26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா அணி வெல்லும்.

கடைசியாக தென்னாப்பிரிக்கா அணி தொடரை வென்றது..?

தென்னாப்பிரிக்கா அணி கடைசியாக கடந்த 1999ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது. அப்போது, தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக ஹான்சி குரோன்ஜே இருந்தார். இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வான்கடேயில் நடந்த போட்டியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பின்னர் பெங்களூரு டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த நேரத்தில், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார்.

ALSO READ: மார்கோ ஜென்சன் வரலாறு.. திணறும் இந்திய அணி! ஆதிக்கம் செலுத்தும் தென்னாப்பிரிக்கா..!

இந்தியா தொடரை 0-2 என இழந்தாலும், சச்சின் டெண்டுல்கர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதல் டெஸ்டில் சச்சின் முதல் இன்னிங்ஸில் 97 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 8 ரன்களும் எடுத்தார். பெங்களூரு டெஸ்டில், மாஸ்டர் பிளாஸ்டர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 21 மற்றும் 20 ரன்கள் எடுத்தார்.

நேற்றைய நாளில் நடந்தது என்ன..?

போதுமான வெளிச்சம் இல்லாததால் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்டின் 3வது நாளில் திட்டமிடப்பட்ட நேரத்தை விட சற்று முன்னதாகவே நடுவர்கள் போட்டியை முடிக்க வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கை விளக்குகள் இருந்தாலும், ஆட்டத்தை தொடர்ந்து விளையாட முடியவில்லை . குவஹாத்தி டெஸ்ட் இப்போது தென்னாப்பிரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது . இங்கிருந்து, இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

ALSO READ: தோல்வி அபாயத்தில் இந்திய அணி.. WTC பைனலுக்கு நுழையுமா..? நிலவரம் என்ன?

இன்றைய நாளில் நிலவரம் என்ன..?

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்டின் நான்காவது நாளான இன்று (2025 நவம்பர் 25) 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்களுக்கு மேல் 2வது இன்னிங்ஸில் டிக்ளேர் செய்தது. இதன்மூலம், தென்னாப்பிரிக்கா அணி 548 ரன்களுக்கு முன்னிலை வகித்துள்ளது. இந்த இலக்கு இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால். இந்த இலக்கை இந்திய அணி துரத்தாமல் டிரா செய்தாலும் தென்னாப்பிரிக்கா அணி தொடரை வெல்லும். அதேநேரத்தில், இலக்கை துரத்த முயற்சித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தால் 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை அதன் சொந்தமண்ணில் தென்னாப்பிரிக்கா அணி ஒயிட்வாஷ் செய்யும்.

பெங்களூரு ஏ.டி.எம் கொள்ளை சம்பவம்.. வெளியான திடுக் தகவல்..
கோல்ஃப் உலகையே ஆச்சரியப்பட வைத்த பெண்ணின் வெற்றி - அப்படி என்ன நடந்தது?
பெண்கள் பெண்களை காக்கும் அதிசய சக்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் ரஷ்மிகா மந்தனா!
துபாய் ஏர்ஷோவில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம்.. காரணத்தை சொன்ன நிபுணர்கள்..