IND vs SA: 30 ஆண்டுகளில் நடக்காதது நடக்க போகிறதா? மோசமான சாதனையை படைக்குமா இந்தியா?
India vs South Africa Test Series: கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ், இந்திய கிரிக்கெட் அணி கடந்த நவம்பரில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. ஒரு வருடத்தில் இந்தியா சொந்த மண்ணில் முழுமையான வெற்றியைப் பெறுவது இது இரண்டாவது முறையாக இருக்கலாம்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா
குவஹாத்தியில் நடந்து வரும் இந்தியா – தென்னாப்பிரிக்கா (India – South Africa 2nd Test) இடையிலான இரண்டாவது டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) தோல்வியின் விளிம்பில் உள்ளது. அந்தளவிற்கு தென்னாப்பிரிக்கா அணி முழு ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 201 ரன்களுக்குள் சுருண்டது. தென்னாப்பிரிக்கா அணி அடுத்ததாக பேட்டிங் செய்து 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், 500 ரன்களுக்கு மேற்பட்ட ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இந்தபோட்டியில், இந்திய அணி தோல்வியை சந்தித்தால் மோசமான சாதனையை படைக்கும். இதுமட்டுமின்றி, மற்றொரு மோசமான சாதனையை படைக்கும் அபாயத்திலும் இந்திய அணி உள்ளது.
ALSO READ: தோல்வியை நோக்கி இந்திய அணி.. இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா கடைசியாக டெஸ்ட் தொடரை எப்போது வென்றது?
இதுவரை ஒரு சதம் கூட இல்லை..!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி சார்பில் இதுவரை யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே ஒரு முறை அரைசதம் அடித்துள்ளார். முதல் டெஸ்டில் எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் 50 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், யஷஸ்வி ஜெய்ஸ்சால் மட்டுமே 58 ரன்கள் எடுத்தார். குவஹாத்தி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், தென்னாப்பிரிக்காவின் செனுரன் முத்துசாமி சதம் 109 ரன்களும், மார்கோ ஜான்சன் 93 ரன்களும் விளாசினர். மேலும், 2வது இன்னிங்ஸில் ஸ்டப்ஸ் 94 அன்கள் எடுத்திருந்தார்
30 வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு நெருக்கடி:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு இப்போது இரண்டாவது இன்னிங்ஸ் மீதமுள்ளது. இந்த இன்னிங்ஸில் எந்த இந்திய பேட்ஸ்மேனும் சதம் அடிக்கவில்லை என்றால், 30 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் சதம் அடிக்காதது இதுவே முதல் முறை.
சொதப்புகிறதா கவுதம் கம்பீரின் பயிற்சி..?
கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ், இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2024ம் ஆண்டு நவம்பரில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. ஒரு வருடத்தில் இந்தியா சொந்த மண்ணில் முழுமையான வெற்றியை இழப்பது இது இரண்டாவது முறையாக இருக்கலாம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டை டிரா செய்யும் நோக்கத்துடன் இந்திய அணி இப்போது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யலாம். தொடரில் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. எனவே, இரண்டாவது டெஸ்ட் டிராவானாலும், தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வெல்லும்.
ALSO READ: வெற்றியை நோக்கி தென்னாப்பிரிக்கா.. தோல்வி விளிம்பில் இந்தியா.. 4வது நாள் ஹைலைட்ஸ்!
டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும். முதல் போட்டி வருகின்ற 2025 நவம்பர் 30ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.