Gautam Gambhir: சொதப்பும் கம்பீரின் பயிற்சி.. டெஸ்ட் போட்டியில் தடுமாறுகிறதா இந்திய அணி?
Indian Cricket Team: முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர்களான ராகுல் டிராவிட் மற்றும் ரவி சாஸ்திரியின் பயிற்சியை ஒப்பிடும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பீரின் சாதனை மோசமாகவே உள்ளது. கம்பீரின் பயிற்சியின் கீழ், இந்திய அணி தனது முதல் டெஸ்ட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிராக வென்றது.

கவுதம் கம்பீர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது. அடுத்ததாக, குவஹாத்தியில் நடைபெறும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி (Indian Cricket Team) வெற்றிபெற்றால் மட்டுமே, இந்திய அணியால் தொடர் 1-1 என முடிவடையும். ஒருவேளை இந்திய அணி இந்த போட்டியிலும் டிரா அல்லது தோல்வியை சந்தித்தால், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்கும். அதன்படி, கவுதம் கம்பீர் பயிற்சியாளராக மற்றொரு சோதனையை எதிர்கொள்வார்.
டெஸ்ட் போட்டிகளில் சொதப்பும் கம்பீர் திட்டம்:
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீரின் பயிற்சி தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளில் கம்பீர் சில அதிரடியான முடிவுகளை எடுத்தாலும், அது எதுவும் பலனளிக்கவில்லை. மேலும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வியை எழுப்பி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் நீக்கப்பட்டார். மேலும், 3வது இடத்தில் களமிறங்கும் சாய் சுதர்ஷனுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை களமிறங்கினார். இந்த இடத்தில் சுந்தர் சிறப்பாக செயல்பட்டாலும், இந்த வேலையை 7 அல்லது 8வது இடத்தில் செய்திருக்கலாம். மேலும், அனுபவம் வாய்ந்த வீரர்களை விட இளம் வீரர்கள் மீது கம்பீர் அதிக நம்பிக்கை வைப்பது சில நேரங்களில் தவறாகிவிடுகிறது.
ALSO READ: 2வது டெஸ்டில் சுப்மன் கில் விளையாடுவாரா..? கவுதம் கம்பீர் கொடுத்த ட்விஸ்ட்!
கம்பீரின் பயிற்சியின் கீழ் செயல்திறன்
It’s been a tough start for the Indian Test team under Gautam Gambhir. pic.twitter.com/5HyniNmWjA
— Cricbuzz (@cricbuzz) November 17, 2025
முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர்களான ராகுல் டிராவிட் மற்றும் ரவி சாஸ்திரியின் பயிற்சியை ஒப்பிடும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பீரின் சாதனை மோசமாகவே உள்ளது. கம்பீரின் பயிற்சியின் கீழ், இந்திய அணி தனது முதல் டெஸ்ட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிராக வென்றது. பின்னர், நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அவமானகரமான தோல்வியை சந்தித்தது. பின்னர், இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை இழந்தது. இதன்பிறகு, சுப்மன் கில் தலைமையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி தொடரை 2-2 என சமன் செய்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சொந்த மண்ணில் தொடரை வென்றது. இப்போது, தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி பெற்ற தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பின்னடைவை கொடுத்தது.
ALSO READ: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தோல்வி.. புள்ளிகள் பட்டியலில் சரிந்ததா இந்திய அணி?
ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ், இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டது. ஆஸ்திரேலியாவில் இரண்டு டெஸ்ட் தொடர்களை வென்று சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தியது. டிராவிட்டின் பயிற்சியும் இதேபோன்ற சாதனையை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த 2 பயிற்சியாளர்களின் தலைமைகளின் கீழும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஒரு முறை தோல்வியடைந்துள்ளது. ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ், இந்திய அணி கடந்த 2021ம் ஆண்டு நியூசிலாந்திடம் தோற்றது. அதேநேரத்தில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ், கடந்த 2023ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும், கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ், இந்திய அணி 2025 இறுதிப் போட்டியைக் கூட எட்டவில்லை.