India vs England Test: லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்தியாவின் அதிகபட்ச சேஸிங் எது..? முழு ரெக்கார்ட் லிஸ்ட் இதோ!
Lord's Test India's Chase History: லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய அணி 19 போட்டிகள் விளையாடியுள்ளது. 11 சேசிங் முயற்சிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 1986ல் கபில் தேவ் தலைமையில் 136 ரன்களை துரத்தி வென்றது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. 193 ரன்கள் இலக்கை அடைய வேண்டிய இந்தப் போட்டியில், இந்தியாவின் வெற்றி வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி
வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் (Lord’s Cricket Ground) வெற்றி பெற வேண்டும் என்பது ஒவ்வொரு அணியின் கனவாக உள்ளது. இந்த பொன்னான வாய்ப்பு சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு (Indian Cricket Team) கிடைத்துள்ளது. இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி (IND vs ENG 3rd Test) கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் இரு அணிகளின் முதல் இன்னிங்ஸில் தலா 387 ரன்கள் எடுத்தனர். முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு எந்த அணிக்கும் முன்னிலை கிடைக்கவில்லை. வெறும் 193 ரன்கள் எடுத்தால் லார்ட்ஸில் இந்திய அணி வரலாறு கிடைக்கும். அதன்படி, லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்தியாவின் சேசிங் சாதனை எப்படி இருக்கிறது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
லார்ட்ஸில் இந்தியாவின் துரத்தல் சாதனை
லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்தியா இதுவரை மொத்தம் 19 போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில் 11 முறை இலக்கைத் துரத்தும் எண்ணத்தில் இந்திய அணி களத்தில் இறங்கியுள்ளது. இவற்றில், லார்ட்ஸ் மைதானத்தில் சேஸிங் செய்யும் போது இந்திய அணி ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 1986 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்திய அணி லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற்றபோது இந்தியாவின் இந்த வெற்றி கிடைத்தது. அதன்படி, இந்திய அணி சேஸிங் செய்யும் போது ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. மேலும், 7 முறை தோல்வியை சந்தித்துள்ளது. அதேநேரத்தில், 3 போட்டிகளை இந்திய அணி டிராவில் முடித்துள்ளது.
ALSO READ: 12 ஆண்டுகளில் முதல் முறை.. இவர் இல்லாமல் டெஸ்டில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி!
லார்ட்ஸில் இந்தியாவின் அதிகபட்ச வெற்றிகரமான ரன் சேஸிங்:
Innings Break!
Outstanding bowling display from #TeamIndia! 👏 👏
4⃣ wickets for Washington Sundar
2⃣ wickets each for Mohammed Siraj & Jasprit Bumrah
1⃣ wicket each for Akash Deep & Nitish Kumar ReddyIndia need 193 runs to win!
Updates ▶️ https://t.co/X4xIDiSmBg… pic.twitter.com/1BRhfPzynv
— BCCI (@BCCI) July 13, 2025
ALSO READ: சாரா டெண்டுல்கருடன் காதலா..? பொதுவெளியில் வெளிப்படையாக பேசிய சுப்மன் கில்
கடந்த 1984ம் ஆண்டு லார்ட்ஸில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த அதிகபட்ச ரன் சேசிங் 344 ரன்கள் ஆகும். லார்ட்ஸ் டெஸ்டில் 300 ரன்களுக்கு மேல் என்ற இலக்கை எட்டிய ஒரே அணி வெஸ்ட் இண்டீஸ் தான். மறுபுறம், இந்திய அணியால் 300 ரன்கள் என்ற இலக்கை ஒரு முறை கூட துரத்தியது இல்லை. அதேபோல், 200 ரன்கள் கூட துரத்த முடியவில்லை. லார்ட்ஸில் இந்திய அணியின் மிக வெற்றிகரமான ரன் சேசிங் 136 ரன்கள் ஆகும். இது 1986ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக வெற்றியை பதிவு செய்தது.