India vs England 4th Test: சச்சினின் சதமே கடைசி.. ஓல்ட் டிராஃபோர்டில் 35 ஆண்டுகளாக சத வறட்சி.. முடிவு கட்டுவார்களா இந்திய பேட்ஸ்மேன்கள்..?
Manchester Test: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 4வது போட்டி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இந்திய அணி 35 ஆண்டுகளாக ஓல்ட் டிராஃபோர்டில் சதம் அடிக்காமல் உள்ளது. இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த வறட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும், தொடரை சமன் செய்யவும் பெரிய ஸ்கோரை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்திய பேட்ஸ்மேன்கள்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் (India – England Test Series) மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஒரு பரபரப்பான திருப்பத்தில் உள்ளது. இதுவரை இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) தலைமையிலான இங்கிலாந்து அணி தற்போது 2-1 என முன்னிலை வகிக்கிறது. தொடரை வெல்ல இந்திய அணிக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் 4வது போட்டி வருகின்ற 2025 ஜூலை 23ம் தேதி முதல் மான்செஸ்டரில் (Old Trafford Cricket Ground) நடைபெறும். இந்தப் போட்டியில் வெற்றி பெற, இந்திய அணி ஒரு பெரிய ஸ்கோரை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். இதற்காக இந்திய பேட்ஸ்மேன்கள் 35 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் ஸ்டேடியத்தில் இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்திறன் அவ்வளவு சிறப்பாக இல்லை. அதற்கான புள்ளிவிவரங்கள் இதோ..
மான்செஸ்டரில் சதம் அடிக்க காத்திருக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்:
ஓல்ட் டிராஃபோர்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த கடைசி இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் ஆவார். கடந்த 1990ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தனது 17 வயதில் இந்த சாதனையை படைத்தார். இந்த போட்டியில், முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீனும் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கரின் 119 ரன்கள் எடுத்த ஆட்டத்தால் மட்டுமே இந்திய அணி அந்த போட்டியை டிரா செய்தது. இதன்பிறகு, இந்த ஸ்டேடியத்தில் எந்த இந்திய வீரர்களும் சதம் அடித்தது கிடையாது. அதன்படி, இந்திய அணி வீரர்கள் இப்போது இந்த 35 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெற, பர்மிங்காம் டெஸ்ட் போன்ற முதல் இன்னிங்ஸில் ஒரு பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்து வெற்றியை பெற முடியும்.
ALSO READ: ஓல்ட் டிராஃபோர்ட் சாபத்தை இந்தியா உடைக்குமா? சுப்மன் கில் படைக்கு காத்திருக்கும் சவால்!
கடைசியாக சச்சின் சதம்:
Sachin Tendulkar was the last Indian to score Hundred at Old Trafford in Test Cricket…!!!
– He did at the age of 17 🤯 pic.twitter.com/yye2cH8eck
— Johns. (@CricCrazyJohns) July 18, 2025
சிறப்பான பார்மில் இந்திய பேட்ஸ்மேன்கள்:
நடப்பு இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தொடக்க வீரர் கே.எல். ராகுல் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ரன்கள் எடுத்துள்ளனர். கடந்த 6 இன்னிங்ஸ்களில் ரவீந்திர ஜடேஜா 3 முறை மட்டுமே அவுட்டாகியுள்ளார்.
ALSO READ: டெஸ்டில் பும்ரா கால் வைத்தால் தோல்வியா..? வெளியான புள்ளிவிவரங்கள்!
அதே நேரத்தில், சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் முக்கியமான ரன்களை எடுத்தனர். இதுபோன்ற சூழ்நிலையில், மான்செஸ்டரில் இந்த சத வறட்சியை முடிவுக்குக் கொண்டுவர இந்த பேட்டிங் யூனிட் பலம் பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இந்திய அணி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்.