IND vs WI 1st Test: வரலாற்றில் இது 4வது முறை மட்டுமே! 18 வருட வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்த இந்திய அணி!

Indian Cricket Team Records: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் ஆண்டில் ஒரே டெஸ்ட் இன்னிங்ஸில் மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்தது இது நான்காவது முறையாகும். இப்படியான முதல் வரலாறு கடந்த 1979ம் ஆண்டு நடந்தது. இதைத் தொடர்ந்து 1986 மற்றும் 2007 இல் நடந்தது.

IND vs WI 1st Test: வரலாற்றில் இது 4வது முறை மட்டுமே! 18 வருட வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்த இந்திய அணி!

இந்திய அணி

Published: 

04 Oct 2025 08:23 AM

 IST

அகமதாபாத்தில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் (West Indies) அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்கள் அற்புதமாக விளையாடி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது முறையாக மட்டுமே நிகழும் ஒரு சாதனையை படைத்தனர். இதன் மூலம், 18 ஆண்டுகால வறட்சிக்கு சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்தது. 2025 அக்டோபர் 3ம் தேதியான நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் 162 ரன்கள் மட்டுமே எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணியை விட இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்றது.

18 வருட வறட்சி முடிவு:


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் 3 இந்திய வீரர்கள் சதம் அடித்தனர். இந்த ஆண்டு ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட இந்திய வீரர்கள் சதம் அடித்தது இது மூன்றாவது முறையாகும். அதாவது, 2025 ஆம் ஆண்டில் ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்தது இதுவே முதல் முறை.

ALSO READ: ஒரே நாளில் கே.எல்.ராகுல், ஜூரெல், ஜடேஜா சதம்! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி ஆதிக்கம்!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் ஆண்டில் ஒரே டெஸ்ட் இன்னிங்ஸில் மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்தது இது நான்காவது முறையாகும். இப்படியான முதல் வரலாறு கடந்த 1979ம் ஆண்டு நடந்தது. இதைத் தொடர்ந்து 1986 மற்றும் 2007 இல் நடந்தது. 2007க்கு பிறகு, அதாவது 18 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 2015ம் ஆண்டில் இது நடந்துள்ளது. இந்தியாவுக்காக கே.எல். ராகுல், துருவ் ஜுரெல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதம் அடித்தனர். இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கே.எல். ராகுல் 197 பந்துகளில் 100 ரன்களும், ஜுரெல் 210 பந்துகளில் 125 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதேநேரத்தில், ரவீந்திர ஜடேஜா இதுவரை 176 பந்துகளை எதிர்கொண்டு மூன்று சிக்ஸர்களுடன் 104 ரன்கள் எடுத்துள்ளார்.

ALSO READ: கோலி மற்றும் ரோஹித் மீண்டும் வருவார்களா? ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு!

விக்கெட் எடுக்க திணறும் வெஸ்ட் இண்டீஸ்:

3 சதங்கள் மட்டுமின்றி, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 100 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். சாய் சுதர்சன் மட்டுமே இரட்டை இலக்கை தொடவில்லை. அவர் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதேநேரத்தில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்கள் எடுத்திருந்தார்.