Mohammed Shami: இந்திய அணியில் வேண்டுமென்றே புறக்கணிப்பு.. தேர்வுக்குழுவை விளாசிய ஷமியின் பயிற்சியாளர்!

IND vs SA Test Series 2025: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணிக்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தேர்வுக் குழுவால் முகமது ஷமி பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. இந்தநிலையில், இதுகுறித்து முகமது ஷமியின் தனிப்பட்ட பயிற்சியாளர் முகமது பத்ருதீன், இந்த விஷயத்தில் தனது ஏமாற்றத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

Mohammed Shami: இந்திய அணியில் வேண்டுமென்றே புறக்கணிப்பு.. தேர்வுக்குழுவை விளாசிய ஷமியின் பயிற்சியாளர்!

முகமது ஷமி

Published: 

07 Nov 2025 12:53 PM

 IST

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. சமீபத்தில், இந்த தொடருக்கான இந்திய அணியை (Indian Cricket Team) பிசிசிஐ அறிவித்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெறாதது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பி வருகிறது. நடந்து வரும் 2025/26 ரஞ்சி டிராபியில் தனது பெங்கால் அணிக்காக முதல் 3 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணிக்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தேர்வுக் குழுவால் முகமது ஷமி பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. இந்தநிலையில், இதுகுறித்து முகமது ஷமியின் தனிப்பட்ட பயிற்சியாளர் முகமது பத்ருதீன், இந்த விஷயத்தில் தனது ஏமாற்றத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

என்ன சொன்னார் பத்ருதீன்..?


இந்தியா டுடேக்கு முகமது பத்ருதீன் அளித்த பேட்டியில், ”இந்திய தேர்வுக்குழு முகமதுஷமியை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. வேறு எந்த காரணத்தையும் என்னால் நினைக்க முடியவில்லை. இந்திய அணியில் விளையாடுவதற்கு முகமது ஷமி தகுதியற்றவர் அல்ல. ஒரு வீரர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தும்போது, ​​அவர் தகுதியற்றவராகத் தெரியவில்லை. தேர்வாளர்கள் அவரை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள். ஏன் என்பதை அவர்களால் மட்டுமே விளக்க முடியும்.” என்றார்.

ALSO READ: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்… துணை கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்!

தொடர்ந்து பேசிய அவர், ”தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமியை சேர்க்க அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு எடுத்த முடிவு முன்னரே தீர்மானிக்கப்பட்டது. 35 வயதான முகமது ஷமி ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டிகளுக்கான இந்தியா ஏ அணியில் சேர்க்கப்படவில்லை, பின்னர் சீனியர் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

இந்திய தேர்வுக்குழு இப்போது அவரைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று முடிவு செய்துவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன், இது முற்றிலும் தவறு என்று நான் நினைக்கிறேன். நீங்கள் டெஸ்ட் அணியைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அது ரஞ்சி டிராபியில் அவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். நீங்கள் டி20 அடிப்படையில் டெஸ்ட் போட்டிகளுக்குத் தேர்வு செய்தால், அது சரியல்ல. ஆனால் இங்கே முடிவுகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது” கூறினார்.

ALSO READ: 3 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்.. இந்திய அணியில் இல்லாத இடம்.. ஷமியை தண்டிக்கிறதா பிசிசிஐ?

கடந்த முறை, முகமது ஷமி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு உடற்தகுதி காரணமாகக் கூறப்பட்டது. இதன்பிறகு முகமது ஷமி தற்போது ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் உத்தரகண்ட் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகளையும், குஜராத்துக்கு எதிராக 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன்மூலம்,2 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி நிச்சயம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.