IND vs SA: மார்கோ ஜென்சன் வரலாறு.. திணறும் இந்திய அணி! ஆதிக்கம் செலுத்தும் தென்னாப்பிரிக்கா..!
IND vs SA 2nd Test day 3 Highlights: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலளித்த இந்திய அணி வெறும் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஃபார்மில் உள்ள பேட்ஸ்மேன் துருவ் ஜூரெல் ரன் எடுக்காமல் வெளியேற, சாய் சுதர்ஷன் மூன்றாவது இடத்தில் களமிறங்கி வெறும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - மார்கோ ஜென்சன்
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது (IND vs SA 2nd Test) மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் நேர ஆட்ட முடிவில், தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்திருந்தது. இதன்மூலம், தென்னாப்பிரிக்கா அணி ஒட்டுமொத்த முன்னிலை 314 ரன்கள் ஆகும். இந்தியாவின் (Indian Cricket team) முதல் இன்னிங்ஸ் வெறும் 201 ரன்களுக்கு சுருண்டது. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு 288 ரன்கள் முன்னிலை கிடைத்தது. இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி மார்கோ ஜான்சன் வரலாறு படைத்தார். மூன்றாம் நாளான இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னிங்ஸை தொடங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுலை 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேசவ் மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
ALSO READ: இந்தியாவிற்கு எதிராக இந்தியர் செய்த சம்பவம்.. 480 ரன்கள் பின்தங்கிய நிலையில் ரிஷப் படை!
இந்தியாவிற்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஆதிக்கம்:
Stumps on Day 3️⃣
We will resume proceedings tomorrow with South Africa leading by 314 runs.
Scorecard ▶️ https://t.co/Hu11cnrocG#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/5IDd6XdSMm
— BCCI (@BCCI) November 24, 2025
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலளித்த இந்திய அணி வெறும் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஃபார்மில் உள்ள பேட்ஸ்மேன் துருவ் ஜூரெல் ரன் எடுக்காமல் வெளியேற, சாய் சுதர்ஷன் மூன்றாவது இடத்தில் களமிறங்கி வெறும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் 7 ரன்களுக்கு மேல் எடுத்து ஆட்டமிழந்தார். ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதிஷ்குமார் ரெட்டியும் விரைவாக ஆட்டமிழக்க, வாஷிங்டன் சுந்தர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். இதன் விளைவாக, இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்போது, தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 288 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 314 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா டெஸ்டில் இந்தியா ஏற்கனவே 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இப்போது, குவஹாத்தி டெஸ்டிலும் இந்திய அணி தோல்வி அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.
ALSO READ: தமிழ்நாடு பூர்வீகம்.. இந்தியாவிற்கு எதிராக சதம் அடித்து சம்பவம்.. யார் இந்த செனுரன் முத்துசாமி?
மார்கோ ஜான்சன் வரலாறு:
2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை மார்கோ ஜான்சன் பெற்றார். இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மார்கோ ஜான்சன் பேட்டிங்கில் 93 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.