IND vs SA 1st Test: முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி.. ஈடன் கார்டனில் தென்னாப்பிரிக்கா அபாரம்..!

IND vs SA 1st Test Result: ஈடன் கார்டனில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பாதுகாத்ததற்கான சாதனை 192 ரன்கள் ஆகும். இந்த சாதனை கடந்த 1972ம் ஆண்டு படைக்கப்பட்டது, இருப்பினும், 53 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்னாப்பிரிக்கா ஈடன் கார்டனில் 124 ரன்களைப் பாதுகாத்ததன் மூலம் அந்த சாதனையை முறியடித்தது.

IND vs SA 1st Test: முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி.. ஈடன் கார்டனில் தென்னாப்பிரிக்கா அபாரம்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்

Updated On: 

16 Nov 2025 15:09 PM

 IST

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் (IND vs SA 1st Test) தென்னாப்பிரிக்கா அணி வெறும் 3 நாட்களில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை (Indian Cricket Team) 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது. இந்த அற்புதமான வெற்றியின் மூலம், தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற முன்னிலை பெற்றது மட்டுமல்லாமல், ஈடன் கார்டனில் 53 ஆண்டுகால சாதனையையும் தென்னாப்பிரிக்கா அணி முறியடித்தது. ஈடன் கார்டனில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பாதுகாத்ததற்கான சாதனை 192 ரன்கள் ஆகும். இந்த சாதனை கடந்த 1972ம் ஆண்டு படைக்கப்பட்டது, இருப்பினும், 53 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்னாப்பிரிக்கா ஈடன் கார்டனில் 124 ரன்களைப் பாதுகாத்ததன் மூலம் அந்த சாதனையை முறியடித்தது.

ALSO READ: 3 பந்துகளை மட்டுமே சந்தித்த கில்.. பாதியில் வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன?

தோல்வியை சந்தித்த இந்திய அணி:


முதல் டெஸ்டில் 2வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 153 ரன்கள் எடுத்து, இந்தியாவுக்கு 124 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்த இலக்கை இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால், ஈடன் கார்டனில் இந்த இலக்கு ஒரு மலை போல இருந்தது. இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால், 21 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்த அதன் சொந்த சாதனையை அது முறியடித்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு பதிலாக, தென்னாப்பிரிக்கா 124 ரன்களை பாதுகாத்ததன் மூலம் 53 ஆண்டுகால சாதனையை முறியடித்தது.

124 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 100 ரன்கள் கூட எடுக்கவில்லை. கேப்டன் சுப்மன் கில் இல்லாதது இந்திய அணிக்கு மேலும் பேரடியாக அமைந்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சில் வெறும் 93 ரன்களுக்கு இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. இதன் விளைவாக, தென்னாப்பிரிக்கா போட்டியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் முதல் டெஸ்ட் வெற்றியை தென்னாப்பிரிக்கா அணி பதிவு செய்தது.

ALSO READ: கலக்கிய ஜடேஜா- குல்தீப் கூட்டணி.. 97 ரன்களில் தடுமாறும் தென்னாப்பிரிக்கா!

முதல் டெஸ்ட் போட்டியில் நடந்தது என்ன..?

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 189 ரன்கள் எடுத்து 30 ரன்கள் முன்னிலை பெற்றது. தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 154 ரன்கள் எடுத்து, இந்தியாவுக்கு 124 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இருப்பினும், அந்த இலக்கை எதிர்கொள்ளும் போது இந்திய பேட்டிங் மோசமாக சரிந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.