IND vs ENG 4th Test: புதிய மாற்றத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து.. இந்திய அணி தாக்கு பிடிக்குமா..?
England Announces Playing XI: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி ஜூலை 23, 2025 அன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற உள்ளது. காயம் காரணமாக ஷோயப் பஷீர் விலகியதை அடுத்து, லியாம் டாசன் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணி
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் (IND vs END Test Series) கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டி நாளை அதாவது 2025 ஜூலை 23ம் தேதி முதல் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு (Old Trafford Cricket Ground) ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தநிலையில், இங்கிலாந்து தனது விளையாடும் பிளேயிங் லெவன் அணியை அறிவித்துள்ளது. காயமடைந்த சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீருக்கு பதிலாக லியாம் டாசன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தொடரின் முதல் போட்டி லீட்ஸில் நடைபெற்றது. அங்கு பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் பின்னர், பர்மிங்காமில் நடந்த 2வது போட்டியில், இந்திய அணி ஒரு சிறந்த மீள் வருகையை மேற்கொண்டு இங்கிலாந்து அணியை 336 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இருப்பினும், லார்ட்ஸில் மீண்டும் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து தொடரில் 2-1 என்ற முன்னிலையில் உள்ளது.
ALSO READ: இந்திய அணியில் அடுத்தடுத்து காயம்.. இங்கிலாந்து டெஸ்டில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விலகலா..?
8 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு திரும்பும் லியாம் டாசன்:
இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அதன்படி, லியாம் டாசன் 8 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் அணிக்குத் திரும்புகிறார். கடைசியாக 2017ம் ஆண்டு லியாம் டாசன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடியுள்ளார். இதுவரை, டாசன் இதற்கு முன்பு இங்கிலாந்து அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 8 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற முடிந்ததால், இது லியாம் டாசனுக்கு ஒரு முக்கியமான வருகையாகும்.
லார்ட்ஸில் நடைபெற்ற விறுவிறுப்பான டெஸ்ட் போட்டியில் பஷீரின் விரலில் காயம் ஏற்பட்டது. அந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி இந்தியாவை 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 2-1 என்ற முன்னிலையைப் பெற்றது. பஷீரை தொடரில் இருந்து நீக்கிய பிறகு, டாசன் அணியில் சேர்க்கப்பட்டார். இப்போது அவருக்கு நேரடியாக விளையாடும் பதினொன்றில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தவிர, இங்கிலாந்து அணி தங்கள் விளையாடும் பதினொன்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யவில்லை.
4வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), லியாம் டாசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்சி, ஜோஃப்ரா ஆர்ச்சர்.
ALSO READ: பும்ரா புதிய வரலாறு படைப்பாரா? அக்ரத்தின் சாதனைகளை முறியடிப்பாரா?
லியாம் டாசனின் அனுபவம்:
Our XI for the fourth Test is here 📋
One change from Lord’s 👊
— England Cricket (@englandcricket) July 21, 2025
35 வயதான லியாம் டாசன் இங்கிலாந்து அணிக்காக மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், லியாம் டாசன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியை 2017 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடினார். அதன் பிறகு, அவர் இங்கிலாந்து அணியில் இருந்து விலகி இருந்தார். இப்போது அவருக்கு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் தனது தகுதியை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.