IND vs AUS 5th T20: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 5வது டி20 போட்டி.. பிட்ச் யாருக்கு சாதகம்..?
IND vs AUS 5th T20 Pitch Report: இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான 5வது டி20 போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. போட்டி நடைபெறும் நாளான 2025 நவம்பர் 7ம் தேதியான இன்று இரவு மழை பெய்யும் வாய்ப்பு 50 சதவீதமாக அதிகரிக்கிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு (IND vs AUS 5th T20) இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி இன்று அதாவது 2025 நவம்பர் 8ம் தேதி காபா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. 4வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு, இந்திய அணி (Indian Cricket Team) தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஐந்தாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டாலும், இந்தியா தொடரை வெல்லும். பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தின் பிட்ச் யாருக்கு சாதகம்..? வானிலை அறிக்கை என்ன சொல்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகள் எங்கு நடைபெறும்..? இடத்தை பட்டியலிட்ட பிசிசிஐ!




பிட்ச் ரிப்போர்ட்:
காபா ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் பவுன்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் இதனால் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நல்ல தாக்கத்தை ஏற்படுத்தலாம். வானிலை சாதகமாக இருந்தால், பந்து ஸ்விங்காகவும் வாய்ப்புள்ளது. மறுபுறம், சிறிது ஓவர்கள் கழிந்த பிறகு பேட்ஸ்மேன்களுக்கு இது உதவியாக இருக்கும்.
அதேநேரத்தில், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இங்கு அதிக திருப்பம் இருக்காது. கடந்த கால சாதனைகளைப் பொறுத்தவரை, முதலில் பேட்டிங் செய்யும் அணி வலுவான சாதனையைப் பெற்றுள்ளது. இங்கு விளையாடிய 11 டி20 போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்யும் அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 159 மற்றும் சராசரி இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் 138 ஆகும்.
வானிலை எப்படி இருக்கும்?
Trusting their instincts 💪
Thinking smart and executing sharper 😎Player of the Match @akshar2026 and @IamShivamDube decode their 𝙖𝙡𝙡-𝙧𝙤𝙪𝙣𝙙 𝙝𝙚𝙧𝙤𝙞𝙘𝙨 in #TeamIndia’s commanding win at the Gold Coast 👏 – By @RajalArora
🔽 Watch | #AUSvIND…
— BCCI (@BCCI) November 7, 2025
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான 5வது டி20 போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. போட்டி நடைபெறும் நாளான 2025 நவம்பர் 7ம் தேதியான இன்று இரவு மழை பெய்யும் வாய்ப்பு 50 சதவீதமாக அதிகரிக்கிறது. இருப்பினும், மழை ஆஸ்திரேலியாவுக்கு பெரிய தொல்லையாக மாறலாம். ஏனெனில் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டால், இந்தியா தொடரை 2-1 என்ற கணக்கில் வெல்லும்.
ALSO READ: இந்தியா-ஆஸ்திரேலியா 5வது டி20யில் மழையா? பிரிஸ்பேனில் வானிலை எப்படி?
இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது டி20 போட்டியை எங்கே பார்ப்பது..?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1:45 மணிக்கு தொடங்கும். டாஸ் மதியம் 1:15 மணிக்கு போடப்படும். போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரடியாக ஒளிபரப்பப்படும். செல்போனில் காண விரும்புவோர் ஜியோஹாட்ஸ்டார் ஆப்பில் நேரடியாக காணலாம்.