IND vs AUS 4th T20: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4வது டி20.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்?
IND vs AUS 4th T20I Match Live Streaming: கடந்த 2025 அக்டோபர் 29ம் தேதி நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டி ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் இந்தியாவை விட 1-0 என முன்னிலை பெற்றது.

சூர்யகுமார் யாதவ் - மிட்செல் மார்ஷ்
ஆஸ்திரேலியாவின் ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தற்போது 5 போட்டிகள் (India vs Australia T20 Series) கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. இந்த 5 டி20 போட்டிகளில் 3 போட்டிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி வருகின்ற 2025 நவம்பர் 6ம் தேதி ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெறும். இந்த தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. தொடரில் 2-1 என முன்னிலை பெற நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற இந்திய அணி (Indian Cricket Team) கட்டாய வெற்றி பெற வேண்டியது முக்கியம்.
ALSO READ: 3வது டி20யில் மாஸ் காட்டிய வாஷிங்டன் சுந்தர்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா..!
நான்காவது டி20 போட்டி எப்போது, எங்கு நடைபெறும்?
Hello, The Gold Coast 👋
𝗧𝗿𝗮𝘃𝗲𝗹 𝗗𝗶𝗮𝗿𝗶𝗲𝘀, ft. our next stop in the #AUSvIND T20I Series 📍#TeamIndia pic.twitter.com/MdlQLtPsR9
— BCCI (@BCCI) November 4, 2025
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4வது போட்டி 2025 நவம்பர் 6 ஆம் தேதி கோல்ட் கோஸ்டில் நடைபெறும். இந்த போட்டியானது இந்திய நேரப்படி பிற்பகல் 1:45 மணிக்கு தொடங்கும். போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இந்திய நேரப்படி பிற்பகல் 1:15 மணிக்கு டாஸ் போடப்படும்.
நேரடி ஒளிபரப்பில் எங்கு காணலாம்?
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான நடந்து வரும் டி20 தொடரின் மீதமுள்ள 2 போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. கூடுதலாக, இந்த போட்டியை டிடி ஸ்போர்ட்ஸிலும் காணலாம்.
எந்த ஓடிடியில் நேரடியாக காணலாம்?
2025 நவம்பர் 6ம் தேதி நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியை OTT தளமான ஜியோ ஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்திலும் நேரடியாக கண்டு களிக்கலாம்.
ALSO READ: 2026ல் இந்திய கிரிக்கெட் அணி எப்போது யாருடன் விளையாடுகிறது..? முழு அட்டவணை இதோ!
1-1 என சமநிலையில் தொடர்:
கடந்த 2025 அக்டோபர் 29ம் தேதி நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டி ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் இந்தியாவை விட 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து, கடந்த 2025 நவம்பர் 2 ஆம் தேதி ஹோபார்ட்டில் நடந்த 3வது டி20 போட்டியிலும், இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகளுக்குப் பிறகு, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 2025 நவம்பர் 6ம் தேதி நடைபெறும் 4வது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற இரு அணிகளும் முயற்சிக்கும்.