IND vs AUS 4th T20: ஆஸ்திரேலியாவை அசால்ட்டாக தோற்கடித்த இந்திய அணி.. 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

IND vs AUS T20 Series: ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4வது போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அனி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

IND vs AUS 4th T20: ஆஸ்திரேலியாவை அசால்ட்டாக தோற்கடித்த இந்திய அணி.. 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்திய அணி

Updated On: 

06 Nov 2025 18:21 PM

 IST

ஆஸ்திரேலியா – இந்தியா (Aus – Ind) இடையிலான 5 போட்டிகள் கொண்ட 4வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team), மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. குயின்ஸ்லாந்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெறும் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பந்து வீச்சாளராக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் சுப்மன் கில் 46 ரன்களும், அபிஷேக் சர்மா 28 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவும் 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இருப்பினும், மற்ற பேட்ஸ்மேன்களால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது, இந்தியா குறைந்தபட்சம் 20-30 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்.

ALSO READ: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்… துணை கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்!

இந்திய பந்து வீச்சாளர்கள் கலக்கல்:

ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய அணி எளிதான வெற்றியை நோக்கிச் செல்வது போல் தோன்றியது. தொடக்கத்திலிருந்தே, இந்திய பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பின் வரிசை பேட்ஸ்மேன்களை அடிக்கவிடவில்லை. முன்னதாக, ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 67 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய அணியின் அதிரடி அணுகுமுறை காரணமாக, அணியின் ரன் விகிதம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. இதனால் மற்ற பேட்ஸ்மேன்கள் வேகமாக விளையாட முயன்றனர். மேலும் அதிரடி ஷாட்களை அடிக்க முயற்சித்தபோது விக்கெட்டுகளையும் இழந்தனர்.

ALSO READ: 3 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்.. இந்திய அணியில் இல்லாத இடம்.. ஷமியை தண்டிக்கிறதா பிசிசிஐ?

சுந்தர்-துபே-படேல் மூவரின் மாயாஜாலம்:

வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இணைந்து ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்தனர். இருவரும் சேர்ந்து ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினர். குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் வெறும் 8 பந்துகளை மட்டுமே வீசி மூன்று ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்சமாக கேப்டன் மிட்செல் மார்ஷ் 30 ரன்கள் எடுத்திருந்தார்.