Shahid Afridi: பாகிஸ்தான் போட்டியை புறக்கணித்த இந்திய வீரர்கள்.. கடுமையாக சாடிய ஷாஹித் அப்ரிடி!

World Championship of Legends: உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி, இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுத்ததால் ரத்து செய்யப்பட்டது. ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் போட்டியில் இருந்து விலகினர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Shahid Afridi: பாகிஸ்தான் போட்டியை புறக்கணித்த இந்திய வீரர்கள்.. கடுமையாக சாடிய ஷாஹித் அப்ரிடி!

ஷாஹித் அப்ரிடி

Published: 

21 Jul 2025 10:58 AM

 IST

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸில் (World Championship Of Legends 2025) இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் (India – Pakistan) இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது. இது இந்திய மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியானது நேற்று அதாவது 2025 ஜூலை 20ம் தேதி பர்மிங்காமில் நடைபெறவிருந்தது. ஆனால், இந்த போட்டியில் ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா (Suresh Raina), ஹர்பஜன் சிங் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பாகிஸ்தானுடன் விளையாட மறுத்துவிட்டனர். இதன் பின்னர், ஏற்பாட்டாளர்கள் போட்டியை ரத்து செய்து மன்னிப்பு கேட்டனர்.

முன்னதாக, ஷிகர் தவான் ஏற்கனவே தனது கடிதத்தின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டு, உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிரான எந்தப் போட்டியிலும் விளையாடப் போவதில்லை என்பதை தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் ஆகியோரும் போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.

ALSO READ: பாகிஸ்தான் எதிராக விளையாட மறுத்த இந்திய வீரர்கள்.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி ரத்து!

அப்ரிடி கருத்து:


இந்தியா – பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த அப்ரிடி, “நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாட வந்துள்ளோம். இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாட விரும்பவில்லை என்றால், அது இங்கு வர மறுத்திருக்க வேண்டும். நீங்கள் பயிற்சி செய்துவிட்டு மறுத்துவிட்டீர்கள், திடீரென்று எல்லாம் ஒரே நாளில் நடந்தது. விளையாட்டு மக்களை நெருக்கமாகக் கொண்டுவருகிறது, ஆனால் அரசியல் எல்லாவற்றிலும் வந்தால், நாம் எப்படி முன்னேறுவோம்? நாம் உட்கார்ந்து பேசாவிட்டால், எந்த முன்னேற்றமும் இருக்காது.

ALSO READ: அடுத்த 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் இங்கேதான்.. இடத்தை குறித்த ஐசிசி!

முன்பே போட்டி ரத்து செய்யப்படுவதாக எனக்கு தெரிந்திருந்தால், நான் மைதானத்திற்குக் கூட சென்றிருக்க மாட்டேன், ஆனால் கிரிக்கெட் தொடர வேண்டும். கிரிக்கெட்டின் முன் ஷாஹித் அப்ரிடி ஒன்றுமில்லை. விளையாட்டு முதலில் வருகிறது. அதில் அரசியலைக் கொண்டுவருவது அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட விரும்பவில்லை என்றால் விளையாட வேண்டாம். என்னை பார்த்தால் உட்காருங்கள் என்று இந்திய வீரர்கள் கூறுகிறார்கள். ஆனால் கிரிக்கெட்டானது ஷாஹித் அப்ரிடியை விட பெரியது, பெரியது” என்று தெரிவித்தார்.