Yuvraj Singh: பொதுவெளியில் கபில் தேவ், தோனியிடம் மன்னிப்பு.. யுவராஜ் சிங் வருத்தப்பட்ட காரணம் என்ன?

MS Dhoni - Kapil Dev: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், யுவராஜ் சிங் தொடர்ந்து அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். அதன்படி, அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் போன்ற நட்சத்திர வீரர்கள் யுவராஜ் சிங்கிடம் இருந்து கற்றுக்கொண்டு, தங்களுக்கென ஒரு தனிப் பாதையை வகுத்துள்ளனர்.

Yuvraj Singh: பொதுவெளியில் கபில் தேவ், தோனியிடம் மன்னிப்பு.. யுவராஜ் சிங் வருத்தப்பட்ட காரணம் என்ன?

எம்.எஸ்.தோனி - யுவராஜ் சிங் - கபில் தேவ்

Published: 

03 Apr 2026 15:14 PM

 IST

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் யுவராஜ் சிங் (Yuvraj Singh) பலம் இளம் தலைமுறைக்கு இன்றும் ரோல் மாடலாக இருந்து வருகிறார். 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கியப் பங்காற்றினார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் தொடர்ந்து அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். அதன்படி, அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் போன்ற நட்சத்திர வீரர்கள் யுவராஜ் சிங்கிடம் இருந்து கற்றுக்கொண்டு, தங்களுக்கென ஒரு தனிப் பாதையை வகுத்துள்ளனர். யுவராஜ் பல வீரர்களுக்கு வழிகாட்டியாகத் தொடர்ந்து உதவி வருகிறார். இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் மற்றும் எம்.எஸ்.தோனி (MS Dhoni) குறித்து யுவராஜ் சிங் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி வைரலாகி வருகிறது.

ALSO READ: பயிற்சியைத் தொடங்கிய எம்.எஸ்.தோனி.. சேப்பாக்கத்தில் நாளை விளையாடுவாரா..?

யுவராஜ் சிங் கூறியது என்ன..?


கடந்த சில ஆண்டுகளாக யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் தனது கிரிக்கெட் வாழ்க்கையை கெடுத்தது கபில் தேவ் என்றும், தனது மகன் யுவராஜ் சிங் வாழ்க்கையை கெடுத்தது எம்.எஸ்.தோனி என்றும் கூறினார். இது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. இந்தநிலையில், யுவராஜ் சிங் ‘ஸ்போர்ட்ஸ் டாக்’கிற்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில், அவர் பல விஷயங்கள் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அதில், “இத்தகைய விஷயங்களைப் பேசுவது சரியல்ல என்று நான் என் அப்பாவிடம் கூறினேன்; மேலும், கபில் பாஜி மற்றும் எம்.எஸ்.தோனி ஆகியோரிடம் மன்னிப்பும் கோரினேன். சொல்லப்போனால், ஏன் புதிய தலைமுறை வீரர்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதைக் கூட எம்.எஸ்.தோனி எனக்கு விளக்கினார். ஐபிஎல்லில் எம்.எஸ். தோனி இன்னும் 10 ஆண்டுகளுக்கு விளையாட வேண்டும். நான் அவரால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். தோனியை ஓய்வுபெறுமாறு கேட்கும் அந்த ஆட்கள் யார், அவர்கள் எத்தகையவர்கள்?” என தெரிவித்தார்.

ALSO READ: ஓய்வு முடிவை திரும்ப பெறும் ரோஹித், கோலி..? சமூக வலைதளங்களில் பரவும் தகவல்!

அபிஷேக் சர்மா:

ஐபிஎல் தொடரில் அபிஷேக் சர்மா கேப்டனாக நியமிக்கப்படாதது குறித்தும் யுவராஜ் சிங் ஒரு முக்கியக் கருத்தை முன்வைத்தார். பேட் கம்மின்ஸ் இல்லாத நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இஷான் கிஷனை கேப்டனாக நியமித்தது. தொடர்ந்து டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள அபிஷேக் சர்மா குறித்து பேசிய யுவராஜ் சிங், “அபிஷேக் சர்மா கடந்த 7 ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்; மேலும் அந்த அணிக்காகச் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார். அவர் மாநில அளவிலும் கேப்டனாகப் பொறுப்பு வகித்து வருகிறார் என்றபோதிலும், அவருக்கு இன்னும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவி கிடைக்கவில்லை.” என்று தெரிவித்தார்.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..