Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டிராவிட்டின் கோபத்தை தூண்டிய அக்தர் – 2004 சாம்பியன்ஸ் டிராபியில் நடந்த வரலாற்றுச் சம்பவம்!

Rahul Dravid: சுவாரசியமான நிகழ்ச்சி ஒன்றை சோயப் அக்தர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், எப்பொழுதும் அமைதியாக இருக்கும் டிராவிட் தன்னிடம் கோபத்தை வெளிப்படுத்தியது ஆச்சரியமாக இருந்தது. போட்டியின் நடுவே கைஃப் செய்த செயல்கள் எனக்கு பிடிக்கவில்லை.

டிராவிட்டின் கோபத்தை தூண்டிய அக்தர் – 2004 சாம்பியன்ஸ் டிராபியில் நடந்த வரலாற்றுச் சம்பவம்!
சோயப் அக்தர் - ராகுல் டிராவிட்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Mar 2025 10:59 AM IST

இந்தியா – பாகிஸ்தான் (India) அணிகள் எப்போது மோதினாலும் போட்டியில் நிச்சயம் அனல் பறக்கும். இந்த நிலையில் ‘தி வால்’ என அழைக்கப்படும் ராகுல் டிராவிட் மிகவும் பொறுமையானவர் என்று பெயர் பெற்றவர். ஆனால் அவரையே கோபமூட்டிய ஒரு சம்பவம் கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற சாம்பியன் டிராபியின் (Champions Trophy) போது நடைபெற்றிருக்கிறது. சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி, இன்சமாம் உல் ஹக் (Inzamam-ul-Haq) தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இந்திய அணியின் சார்பாக கங்குலி ரன் ஏதும் இல்லாமலும் சேவாக், லக்ஷ்மன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். முகமது கைஃப் 227 ரன்கள் எடுத்தார்.

நிதானமா ஆடிய ராகுல் டிராவிட் அதிகபட்சமாக 108 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அஜித் அகர்கர் தன் பங்குக்கு 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்களின் முயற்சி பலனளிக்காததால் இந்திய அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் முகமது யூசுப் 81 ரன்களும், கேப்டன் இன்சமாம் உல் ஹக் 41 ரன்களும் அடிக்க 49.2 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக இர்ஃபான் பதான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கைஃபின் செயலால் கோபமான அக்தர்

பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் அதிவேகமாக பந்து வீசுவதில் பெயர் பெற்றவர். அதனால் இவரை ராபில்பிண்டி எக்ஸ்பிரஸ் என ரசிகர்கள் அழைக்கின்றனர். இந்த நிலையில் இந்த போட்டியின் போது நடந்த சுவாரசியமான நிகழ்ச்சி ஒன்றை சோயப் அக்தர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், எப்பொழுதும் அமைதியாக இருக்கும் டிராவிட் தன்னிடம் கோபத்தை வெளிப்படுத்தியது ஆச்சரியமாக இருந்தது. போட்டியின் நடுவே கைஃப் செய்த செயல்கள் எனக்கு பிடிக்கவில்லை. நான் பந்து வீச வந்தபோது கைப் திடீரென ஸ்டெம்பில் இருந்து விலகினார். இது கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் கைஃபையும் யுவராஜையும் அவுட் செய்தேன்.

சோயப் அக்தர் மீது கோபப்பட்ட டிராவிட்

பின்னர் போட்டியின் நடுவே நான் வீசிய பந்தை ராகுல் டிராவிட் அடித்தார். நான் பந்தை எடுக்க ஓடி வந்தபோது டிராவிட் ரன் எடுக்க என் திசையில் அவர் ஓடி வந்தார். நான் அவரை உன் பக்கம் ஓடு என்றேன். மிகவும் அமைதியானவராக இருந்த டிராவிட் என்னிடம் சண்டையிட்டார். அன்று மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. டிராவிட் கோபப்பட்ட வெகு சில தருணங்களில் அதுவும் ஒன்று என்று தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதற்கு பிறகு  இளம் வீரர்களை ஊக்குவித்து அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகித்து வருகிறார். கேப்டனாக பொறுமையாக செயல்பட்டு முக்கிய முடிவுகளை எடுப்பதில் இவரை தோனிக்கு முன்னோடி என சொல்லலாம். ஒரு வீரராகவும் பயற்சியாராகவும் டிராவிட்டின் ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பு அவரை இந்திய கிரிக்கெட்டின் நிரந்தர அடையாளமாக மாற்றியிருக்கிறது.