India vs Pakistan: இந்திய மகளிர் அணியும் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைக்குலுக்காது.. தடை போட்ட பிசிசிஐ..?

Womens Cricket World Cup 2025: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள இலங்கைக்கு பயணம் செய்கிறது. ஏனெனில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் நடுநிலையான இடங்களில் மட்டுமே தங்கள் அணிகளை விளையாட வைக்க முடிவு செய்துள்ளன.

India vs Pakistan: இந்திய மகளிர் அணியும் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைக்குலுக்காது.. தடை போட்ட பிசிசிஐ..?

இந்திய மகளிர் அணி

Published: 

01 Oct 2025 22:01 PM

 IST

2025 ஆசிய கோப்பையின்போது (2025 Asia Cup) இந்திய ஆண்கள் அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைலுக்கவில்லை. இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதேபோல், தற்போது கொழும்பில் வருகின்ற 2025 அக்டோபர் 5ம் தேதி நடைபெறும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் (Womens Cricket World Cup)  இந்திய அணி பாகிஸ்தான் மகளிர் அணியுடன் கைகுலுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலும், உலகக் கோப்பையில் இத்தகைய செயல்கள் உலகளவில் மிகப்பெரியளவில் சர்ச்சையை கிளப்பும்.

2025 அக்டோபர் 1ம் தேதியான இன்று இந்திய மகளிர் அணி இலங்கைக்கு புறப்படுவதற்கு முன்பு, டாஸ் போடும்போது அல்லது ஆட்டத்திற்கு பிறகும் கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்களில் ஒருவர் கூறியதாவது, ”உலகக் கோப்பையின்போது பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி கைகுலுக்காது. அப்போது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்திய மகளிர் அணிக்கு ஆதரவாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

ALSO READ: இந்திய மண்ணில் நாளை முதல்.. வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட்! இந்திய பிளேயிங் லெவன் எப்படி?

ஆசியக் கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம்:


2025 ஆசியக் கோப்பையின்போது இந்திய ஆண்கள் அணி துபாயில் பாகிஸ்தான் அணியை 3 முறை எதிர்கொண்டது. இதில், இறுதிப்போட்டியின்போது இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதேநேரத்தில், 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு எதிரான முதல் வெற்றிக்கு பிறகு, இந்திய மகளிர் அணி பாகிஸ்தானை வருகின்ற 2025 அக்டோபர் 5ம் தேதி கொழும்பில் எதிர்கொள்கிறது.

ALSO READ: ஆசியக் கோப்பை விவகாரம்! பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்டாரா நக்வி? வெளியான தகவல்!

தொடர்ந்து 4வது ஞாயிற்றுக்கிழமை மோதல்:

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள இலங்கைக்கு பயணம் செய்கிறது. ஏனெனில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் நடுநிலையான இடங்களில் மட்டுமே தங்கள் அணிகளை விளையாட வைக்க முடிவு செய்துள்ளன. அதன்படி, பாகிஸ்தான் அணி தனது அனைத்து உலகக் கோப்பை போட்டிகளையும் இலங்கையில் விளையாடும். அதேநேரத்தில், ஆசியக் கோப்பைக்கு பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெறும் 4வது தொடர்ச்சியான ஞாயிற்றுக்கிழமை இதுவாகும். கடந்த 2025 ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் போட்டி இதுவாகும்.