Asia Cup Rising Stars 2025: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஏ அணி.. பாகிஸ்தான் ஏ அணியுடன் மோதலா?
India A qualified Semi-Finals: இந்திய அணி தற்போது குரூப் பி பிரிவில் 2வது இடத்தில் உள்ளது. அரையிறுதியில் குரூப் பி பிரிவில் 2வது இடத்தை பிடிக்கும் அணி, குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள அணியுடன் அரையிறுதி போட்டியில் மோதும்.

இந்திய ஏ அணி
தோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 (Asia Cup Rising Stars 2025) போட்டியின் அரையிறுதிக்கு இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டியின் குரூப் பி பிரிவில் இந்தியா ஏ (Indian A Cricket Team), பாகிஸ்தான் ஏ, ஓமன் மற்றும் யுஏஇ அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில், ஓமன் மற்றும் யுஏஇ அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன. இந்த குரூப் பி பிரிவில் பாகிஸ்தான் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்ததன் மூலம் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து, இந்தியா 2வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்திய அணி அரையிறுதியில் யாருடன் மோதும்..?
For his stellar all-round performance, including a match-winning half-century, Harsh Dubey is the Player of the Match. 👏
With this victory, India A have qualified for the semi-finals! 👍
Scorecard ▶️ https://t.co/F9u6OP8Yqd#RisingStarsAsiaCup pic.twitter.com/Yeb4qMIr0k
— BCCI (@BCCI) November 18, 2025
இந்திய அணி தற்போது குரூப் பி பிரிவில் 2வது இடத்தில் உள்ளது. அரையிறுதியில் குரூப் பி பிரிவில் 2வது இடத்தை பிடிக்கும் அணி, குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள அணியுடன் அரையிறுதி போட்டியில் மோதும். அதேபோல், குரூப் பி பிரிவில் முதலிடத்தில் உள்ள அணி, குரூப் ஏ பிரிவில் 2ம் இடத்தில் உள்ள அணியையும் எதிர்கொள்ளும். குரூப் பி பிரிவில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் ஏற்கனவே தங்கள் அரையிறுதி போட்டியை பெற்றுவிட்டன. ஆனால், குரூப் ஏ பிரிவில் அரையிறுதிக்கான போட்டி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
ALSO READ: 2026 மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் எப்போது தொடக்கம்..? வெளியான தகவல்..!
அரையிறுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் யாரை எதிர்கொள்ளும்..?
ஆப்கானிஸ்தான் ஏ அணி ஹாங்காங்கிற்கு எதிராக தனது கடைசி ஆட்டத்தை விளையாடும். இதில், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் 4 புள்ளிகளை பெறும். இருப்பினும், ஆப்கானிஸ்தான் அணியின் ரன் ரேட் குறைவாக உள்ளதால் ஒரு பெரிய வெற்றி தேவைப்படும். ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் தலா 4 புள்ளிகள் பெற்றிருந்தால் வங்கதேசம் மற்றும் இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
ALSO READ: வங்கதேச தொடரை ரத்து செய்த பிசிசிஐ.. தள்ளிப்போன இந்திய மகளிர் அணியின் அட்டவணை!
இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா குரூப் ஏ தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வங்கதேசத்தை எதிர்கொள்ளலாம். பாகிஸ்தான் ஏ அணி அதேநேரத்தில் இலங்கை ஏ அல்லது ஆப்கானிஸ்தான் ஏ அணிகளில் ஏதேனும் ஒன்றை எதிர்கொள்ளலாம். இந்தியா ஏ அணியும், பாகிஸ்தான் ஏ அணியும் தங்கள் அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்றால், இறுதிப்போட்டியில் மோதும். அதன்படி, ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் இறுதிப் போட்டி வருகின்ற 2025 நவம்பர் 23ம் தேதி நடைபெறுகிறது.