Asia Cup 2025: விரைவில் 2025 ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி தேதி இதுதான்..!

India-Pakistan Clash: 2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முக்கியப் போட்டி 2025 செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்றும், சுமார் 17 நாட்கள் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டி20 வடிவில் நடைபெறும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல அணிகள் பங்கேற்க உள்ளன.

Asia Cup 2025: விரைவில் 2025 ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி தேதி இதுதான்..!

இந்தியா - பாகிஸ்தான்

Published: 

02 Jul 2025 14:50 PM

கடந்த சில மாதங்களாக இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான (India – Pakistan Tension) உறவுகள் மோசமடைந்துள்ளன. இதன் காரணமாக விளையாட்டு உள்பட பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) திட்டத்தின் கீழ் இந்தியாவும் அந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது. இதன்பிறகு, இரு அணிகளுக்கும் இடையே போர் உருவாகும் சூழ்நிலை உருவாகி, பின் பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யப்பட்டது. இது பாகிஸ்தானுடன் எந்த வகையான கிரிக்கெட்டையும் விளையாடக் கூடாது என்ற அளவுக்கு இந்தியர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்தனர். இருப்பினும், 2025 ஆசியக் கோப்பை (2025 Asia Cup) நடைபெறவுள்ளது. எனவே, இந்த பதட்டங்களுக்கு மத்தியில், போட்டியில் பங்கேற்பு குறித்து பல கேள்விகள் எழுந்தது. ஆனால், இப்போது போட்டி நடைபெறும் என்பது தெளிவாகியுள்ளது. மேலும், அட்டவணையும் கிட்டத்தட்ட தயாராக உள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

2025 ஆசியக் கோப்பை எப்போது தொடங்குகிறது..?

2025 ஆசிய கோப்பை போட்டியின் முதல் போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும் என செய்திகள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், இந்த போட்டியின் முதல் போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 21ம் தேதி நடைபெறும் என்றும் தெரியவந்துள்ளது. ஆசிய கோப்பைக்கான அட்டவணையை ஏ.சி.சி அதாவது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தயாரித்துள்ளது, இது விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்த போட்டி சுமார் 17 நாட்கள் நீடிக்கும். கடந்த 2023 ஆசியக் கோப்பையானது பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஒருநாள் வடிவத்தில் நடத்தப்பட்டது. இந்தநிலையில், 2025 ஆசியக் கோப்பையானது டி20 வடிவத்தில் நடத்தப்பட இருக்கிறது. இதனுடன், ஆசியக் கோப்பை அட்டவணை 2025 ஜூலை மாதம் அறிவிக்கலாம்.

இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது..?

2025 ஆசிய கோப்பையாக இருந்தாலும் சரி, ஐசிசி போட்டியாக இருந்தாலும் சரி, இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது நடைபெறும் என ஆவலுடன் காத்திருப்பார்கள். கிடைத்த தகவலின்படி, வருகின்ற 2025 செப்டம்பர் 7ம் தேதி இந்தியாவும்,பாகிஸ்தான் அணிகள் மோதலாம் என்று கூறப்படுகிறது. இதன்பிறகு, வருகின்ற 2025 செப்டம்பர் 14ம் தேதி சூப்பர் 4ல் இந்தியாவும், பாகிஸ்தானும் மற்றொரு போட்டியில் விளையாடலாம்.

இந்த முறை ஆசிய கோப்பை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றிருந்தாலும், அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்று செய்திகள் வந்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் விளையாட இருக்கின்றன.