Asia Cup 2025: விளையாட வரும் பும்ரா.. உடற்தகுதி பெற்ற சூர்யகுமார் யாதவ்.. வலுவான இந்திய அணி தயார்!

India's Asia Cup 2025 Squad: 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி வருகின்ற 2025 ஆகஸ்ட் 19 அன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜஸ்பிரித் பும்ரா போட்டியில் பங்கேற்க தயாராக இருப்பதாகவும், சூர்யகுமார் யாதவ் உடற்தகுதி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Asia Cup 2025: விளையாட வரும் பும்ரா.. உடற்தகுதி பெற்ற சூர்யகுமார் யாதவ்.. வலுவான இந்திய அணி தயார்!

ஜஸ்பிரித் பும்ரா

Published: 

17 Aug 2025 11:19 AM

2025 ஆசியக் கோப்பைக்கான (2025 Asia Cup) இந்திய கிரிக்கெட் அணி எப்போது அறிவிக்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், வருகின்ற 2025 ஆகஸ்ட் 19ம் தேதி பிசிசிஐ (BCCI), இந்திய அணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) விளையாடுவாரா இல்லையா என்பது குறித்த கேள்வி நீண்ட காலமாக இருந்து வருகிறது. முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கூட பும்ரா 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். இதுபோன்ற சூழ்நிலையில், பும்ரா தற்போது ஆசிய கோப்பையில் தனது இருப்பு குறித்து பிசிசிஐயிடம் விளக்கம் அளித்துள்ளார்.

2025 ஆசியக் கோப்பை:

2025 ஆசியக் கோப்பை வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இதில், இந்திய அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை வருகின்ற 2025 செப்டம்பர் 10ம் தேதி எதிர்கொள்கிறது. பிசிசிஐ இன்னும் அணியை அறிவிக்கவில்லை. இந்தநிலையில், வருகின்ற 2025 ஆகஸ்ட் 19ம் தேதி அஜித் அகர்கர் தலைமையில் தேர்வாளர்கள் கூடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே, ஜஸ்பிரித் பும்ரா ஆசியக் கோப்பை போட்டியில் பங்கேற்க தயாராக இருப்பதாக பிசிசிஐயிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ: ஆசியக் கோப்பையை அதிக முறை வென்ற அணி எது..? முதலிடத்தில் கெத்துக்காட்டும் இந்தியா!

ஜஸ்பிரித் பும்ரா களம்:


இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் நல்ல செய்தி என்னவென்றால், பும்ரா 2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவதை காணலாம். ஆசிய கோப்பைக்கான தேர்வுக்கு ஜஸ்பிரித் பும்ரா தயாராக இருப்பதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வட்டாரம் தெரிவித்தது. தேர்வுக் குழு அடுத்த வாரம் அதாவது 2025 ஆகஸ்ட் 19ம் தேதி 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவிக்கலாம்.

சூர்யகுமார் யாதவ் உடற்தகுதி:

குடலிறக்க பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். சிறிது நாட்களுக்கு முன்பு, சூர்யகுமார் யாதவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுப்மன் கில்லும் இந்திய அணியில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி, பிசிசிஐ எந்த வீரர்களை அணியில் தேர்வு செய்கிறது என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

ALSO READ: ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி எப்படி இருக்கும்..? யாருக்கு தலைமை பொறுப்பு..?

பும்ராவின் சர்வதேச டி20 வாழ்க்கை:

31 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவுக்காக இதுவரை 70 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டி20 வடிவத்தை பொறுத்தவரை 2024 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில், 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே பும்ராவின் சிறந்த செயல்திறன் ஆகும்.