Asia Cup 2025: 2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்காதா..? பிசிசிஐ சொன்னது என்ன..?

India vs Pakistan Asia Cup: 2025 ஆசியக் கோப்பை தொடர்பான சர்ச்சைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது பிசிசிஐ. இந்திய அணி பங்கேற்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடனான அரசியல் பதற்றம் இருந்தபோதிலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐயின் இந்த அறிவிப்பு, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Asia Cup 2025: 2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்காதா..? பிசிசிஐ சொன்னது என்ன..?

ஆசியக் கோப்பை

Published: 

28 Jun 2025 11:01 AM

 IST

2025 ஆசியக் கோப்பையில் (Asia Cup 2025) இந்திய அணி பங்கேற்குமா இல்லையா என்பது குறித்து பல்வேறு கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2025 ஆசியக் கோப்பையில் விலகல் பற்றிய வதந்திகள் உண்மையல்ல என்று தெளிவாக தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, 2025 ஆசிய கோப்பைக்கான விளம்பர சுவரொட்டி சமூக ஊடகங்களில் பரவி வந்தது. இதில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய 2 அணிகள் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், பாகிஸ்தான் அணி விடுபட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நடத்தும் போட்டியில், இந்திய அணி (Indian Cricket Team) இடம்பெறாமல் போகலாம் என்று பலரை நம்ப வைத்தது. இதற்கு காரணம், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் போக்கே காரணம் என்று கூறப்பட்டது. தற்போது இதற்கு விடை கிடைத்துள்ளது.

ஆசிய கோப்பை 2025: இடம், தொடக்க தேதி:

கிடைத்த தகவலின்படி, 2025 ஆசிய கோப்பை போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பர் 12 முதல் 2025 செப்டம்பர் 28 வரை நடைபெற உள்ளது. இருப்பினும், பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கை போன்ற பொதுவான இடங்களில் நடைபெறும் வேண்டும் என்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதால், இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் இந்தியாவில் நடைபெறாது.

இந்தியாவுடன் இணைந்து நடத்தக்கூடிய வாய்ப்புள்ள இரு நாடுகளின் பெயர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் இலங்கை ஆகும். முன்னதாக, பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக 2025  சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தியதிலிருந்து, இந்தியாவின் அனைத்து போட்டிகளும் துபாயில் நடத்தப்பட்டன என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

இந்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் பிசிசிஐ:

கடந்த 2025 மே மாதம் சமூக ஊடகங்களில் 2025 ஆசியக் கோப்பையில் 8 அணிகள் பங்கேற்கும் போட்டியில் இந்தியா இடம்பெறாது என்ற வதந்திகளை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா சமீபத்தில் மறுத்தார். 2025 ஆசிய கோப்பையில் பங்கேற்பது குறித்து இந்திய அரசாங்கத்திடமிருந்து பிசிசிஐ பதிலுக்காகக் காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் இன்சைட் ஸ்போர்ட்டிடம் அளித்த பேட்டி ஒன்றில், “2025 ஆசியக் கோப்பையை புறக்கணிப்பது பற்றி எந்த விவாதமோ அல்லது தொலைதூர யோசனையோ கூட இல்லை. ஐசிசி போட்டிகளில் நாங்கள் பாகிஸ்தானுடன் விளையாடுகிறோம், எங்கள் அரசாங்கம் வேறுவிதமாகக் கூறவில்லை என்றால் அது தொடரும். ஆசியக் கோப்பையைப் பொறுத்தவரை, வரும் நாட்களில் இதுகுறித்து அறிவிக்கப்படும்,” என்று  தெரிவித்தார்.

முன்னதாக, 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஐசிசி, ஒரே குழுவில் இடம்பெற செய்தபோது பிசிசிஐ அல்லது பிசிபி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதன்படி, எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. பிசிசிஐ அல்லது பிசிபி என இரு வாரியங்களும் 2025 ஆசியக் கோப்பையில் விளையாடுவதை புறக்கணித்தால், அது இனி வரும் காலங்களில் ஐசிசி அல்லது ஏசிசி நிகழ்வுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது தெளிவாகிறது.

Related Stories
ICC Women World Cup 2025: அரையிறுதி அபாயம்! 5வது இடத்திற்கு பின்தங்கிய இந்தியா.. புள்ளிகள் பட்டியல் நிலவரம்!
அடுத்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிப்பார்கள்… ரோகித் சர்மா – விராட் கோலிக்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு
Mitchell Starc: ரோஹித்துக்கு எதிராக மணிக்கு 176.5 கிமீ வேகத்தில் பந்து வீசினாரா ஸ்டார்க்? வைராகும் புகைப்படம்!
India Women vs England Women: 3 அரைசதம் அடித்து தொட முடியாமல் போன இலக்கு.. இந்திய அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து!
IND vs AUS: 437 நாட்களுக்கு பிறகு! ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி!
Australia vs India 1st ODI: தீபாவளி பரிசை தர தவறிய இந்திய அணி.. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி!