Father’s Day: அண்ணனைப் போல இருக்கிறார்… மகள் வாமிகா அப்பா விராட் கோலிக்கு எழுதிய கடிதம்

Virat Kohli’s Special Surprise : அப்பாக்களின் தியாகத்தையும் அன்பையும் கொண்டாடும் விதமாக உலக அளவில் தந்தையர் தினம் ஜூன் 15, 2025 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் விராட் கோலியின் மகள் வாமிகா தனது அப்பாவுக்கு எழுதிய கடிதம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Fathers Day: அண்ணனைப் போல இருக்கிறார்...  மகள் வாமிகா அப்பா விராட் கோலிக்கு எழுதிய கடிதம்

விராட் கோலி - அனுஷ்கா சர்மா

Updated On: 

15 Jun 2025 18:33 PM

உலகம் முழுவதும் ஜூன் 15, 2025 அன்று தந்தையர் தினம் (Father’s Day) கொண்டாடப்பட்டு வருகிறது. அப்பாக்களின் அன்பையும் தியாகத்தையும் போற்றும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. பிரபலங்கள் தொடங்கி அனைவரும் தனது அப்பாவின் புகைப்படங்களை சமூக வலைதலங்களில் பகிர்ந்து அவரது பெருமையைப் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் குட்டி குழந்தைகளை வைத்திருக்கும் அப்பாக்கள் தனது மகள் மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் விராட் கோலி (Virat Kohli) – அனுஷ்கா சர்மாவின் (Anushka Sharma) மகள் வாமிகா தனது அப்பா விராட்டிற்கு தந்தையர் தின வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அப்பா விராட் கோலிக்கு மகள் வாமிகா தந்தையர் தின வாழ்த்து

வாமிகா எழுதியத அந்த கடிதத்தில், ”அவர் என் அண்ணனைப் போல இருக்கிறார். அவர் எப்பொதும் நகைச்சுவையாக இருப்பார். அவருக்கு மேக்கப் போட்டு விளையாடுவேன். நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். அவர் என்னை மிகவும் நேசிக்கிறார். தந்தையர் தின வாழ்த்துகள் – வாமிகா” என குறிப்பிடப்பட்டுள்ளது. வாமிகாவின் கடிதம் அவரது குழந்தைத் தனத்துடன் அவர் தனது அப்பாவின் மீது வைத்திருக்கும் அன்பையும் வெளிப்படுத்தியது. ரசிகர்கள் பலரும் வாமிகாவின் கையெழுத்து அழகாக இருப்பதாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அனுஷ்காவின் இன்ஸ்டாகிராம் பதிவு

தனது அப்பாவின் போட்டோவையும் தனது மகளின் கடிதத்தை வெளியிட்ட அனுஷ்கா சர்மா, தனது பதிவில், நான் முதன்முதலில் நேசித்த மனிதருக்கும், நம் மகள் முதன்முதலில் நேசித்த மனிதருக்கும் என் அன்பு. உலகெங்கிலும் உள்ள அன்பான தந்தைகளுக்கும் மகிழ்ச்சியான ஃபாதர்ஸ் டே வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய அன்பும் நினைவுகளும் நிரம்பிய பதிவால், அனுஷ்காவும், சிறுமி வாமிகாவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர்.

விராட் கோலி – அனுஷ்கா சர்மாவின் காதல் கதை

நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகிய இருவரும், கடந்த 2017  ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி இத்தாலியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் இருவருக்கும் 2021 ஜனவரி 11 ஆம் தேதி வாமிகா என்ற மகள் பிறந்தார். அதன் பிறகு, 2024 பிப்ரவரி 15-ம் தேதி, அவர்கள் மகன் அகாய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் கோப்பையை வென்ற நிகழ்வில் விராட் கோலி கண் கலங்க நின்றிருந்தார். அப்போது அவரை அனுஷ்கா சர்மா கட்டிப்பிடித்து தேற்றிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.