Air India Crash: இனி ஒருபோதும் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்.. ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த வார்னர்!

David Warner's Air India Boycott: ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குப் பிறகு, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஏர் இந்தியாவில் பயணம் செய்வதைத் தவிர்க்கிறார். விமானப் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. ஒரு முன்னாள் ஏர் இந்தியா ஊழியரின் சமூக ஊடக பதிவு, விமானத்தில் நீண்டகால பிரச்சினைகளை வெளிச்சமிட்டது. இதனால் டேவிட் வார்னர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் ஏர் இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கேள்வி எழுப்பியுள்ளது.

Air India Crash: இனி ஒருபோதும் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்.. ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த வார்னர்!

டேவிட் வார்னர்

Published: 

14 Jun 2025 16:33 PM

கடந்த 2025 ஜூன் 12ம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானம் (Air India AI171 Crash AI171) (போயிங் 787-8 ட்ரீம்லைனர்) விபத்து உலகம் முழுவதும் பல கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுவரை இந்த விபத்தில் 274 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ஒரு அரிய நிகழ்வாக கருதப்படும் 2 இயந்திரங்களும் ஒரே நேரத்தில் செயலிழந்தது முதல் விமானத்தின் தொழில்நுட்பக் குறைபாடுகள் வரை, இந்த விபத்து குறித்து சமூக வலைதளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் (David Warner), இனி ஒருபோதும் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேவிட் வார்னர் கேள்வி:


ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ஏர் இந்தியாவின் சேவை குறித்தும், உங்களிடம் விமானி இல்லாதபோது ஏன் மக்களை விமானத்தில் ஏற வைக்கிறீர்கள் என்றும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கேள்விகளை அடுக்கியுள்ளார். முன்னதாக, விவேக் என்ற பயனர் ஒருவர் தனது சமூக ஊடகங்களில், ”ஹேய்! நான் ஒரு முன்னாள் ஏர் இந்தியா பணியாளர், இது நான் அடிக்கடி பயணித்த விமானம். இந்த விமானத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினைகள் உள்ளன. பணியாளர்கள், விமானிகள், பொறியாளர்கள், அனைவரும் எப்போதும் பதிவு புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளனர், ஆனால் நிறுவனம் அதன் மிகவும் மதிப்புமிக்க கேட்விக் துறைக்கு ட்ரீம்லைனர் விமானத்தை ஒருபோதும் வைத்திருக்கவில்லை. அதனால்தான் நாங்கள் எப்போதும் இந்த விமானத்தை பறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.” என்று தெரிவித்தார்.

விமானத்தில் சில பிரச்சனைகளை சுட்டிக்காட்டிய முன்னாள் ஏர் இந்தியா விமான ஊழியர் விவேக்கின் சமூக ஊடக வீடியோ குறித்து டேவிட் வார்னர் கருத்து தெரிவித்துள்ளார். இது உண்மையாக இருந்தால், அது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நான் ஒருபோதும் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க மாட்டேன், இது அவர்களுடனான எனது கடைசி உரையாடல்.” என்று தெரிவித்தார்.

இந்தியாவை விரும்பும் டேவிட் வார்னர்:

முன்னதாக, முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், “இந்தியா எனக்கு மிகவும் பிடித்த நாடுகளில் ஒன்று. இந்த நாட்டை எனது 2வது தாயகமாக பார்க்கிறேன். ஓய்வு பெற்ற பிறகு, இந்தியாவில் ஒரு வீடு வாங்கி இங்கு நேரத்தை செலவிட விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.