The Hundred: சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்கு லாக்.. சர்வதேச போட்டி முக்கியம்.. விலகுகிறாரா அப்ரார் அகமது?
Abrar Ahmed: பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அப்ரார் அகமது மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார். எனவே, அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்ட பின்னரே அவர் பதிவு செய்திருக்க வேண்டும். இருப்பினும், தி ஹண்ட்ரட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இன்னும் 50-50 சதவீதமாகவே உள்ளது.

அப்ரார் அகமது
இந்தியாவுக்குச் சொந்தமான சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, இங்கிலாந்தின் தி ஹண்ட்ரட் (The Hundred) லீக்கில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை தங்களது அணியில் சேர்த்தது. அதன் பின்னர், சமூக வலைதளங்களில் காவ்யா மாறனும் சன்ரைசர்ஸும் பரவலான விமர்சனங்களை எதிர்கொண்டனர். அப்ரார் அகமதுவை (Abrar Ahmed) சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ரூ. சுமார் 2.34 கோடி ஒப்பந்தம் செய்தது. பாகிஸ்தான் வீரர் ஒருவரை இந்தியாவுக்குச் சொந்தமான ஒரு அணி வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், SAT20ல் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கும் காவ்யா மாறன் சொந்தக்காரராகும் உள்ளார்.
சமீபத்தில் தி ஹண்ட்ரட் லீக்குகளில் காவ்யா மாறன் ஒரு அணியை வாங்கி, அதற்கு சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி என பெயர் மாற்றி ஏலத்தில் ஒரு பாகிஸ்தான் வீரரை வாங்கினார். இது இந்திய ரசிகர்களை கோபப்படுத்தியதுடன் சன்ரைசர்ஸ் மீது விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இதுபோன்ற சூழ்நிலையில், அப்ரார் அகமது தி ஹண்ட்ரட் அணியில் விளையாட முடியாமல் போகலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ALSO READ: பாகிஸ்தான் வீரர் ஒப்பந்தம்.. எழுதப்படாத விதியை மாற்றிய காவ்யா மாறன்.. கிளம்பும் எதிர்ப்புகள்..!
அப்ரார் அகமது விளையாடுவது குறித்து சஸ்பென்ஸ்:
லீட்ஸ் அணியில் அப்ரார் சேர்க்கப்பட்டிருந்தாலும், தி ஹண்ட்ரட் லீக்குகளில் அவரது பங்கேற்பு குறித்த நிச்சயமற்ற தன்மை இன்னும் நீடிக்கிறது. TOI அறிக்கையின்படி, அப்ராரின் சர்வதேச கிரிக்கெட் உறுதிப்பாடுகள் காரணமாக அவருக்கு NOC கிடைக்க வாய்ப்பில்லை. பாகிஸ்தான் தி ஹண்ட்ரட் லீக்கின் போது வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு NOC வழங்க மறுக்கலாம். வருகின்ற 2026 ஜூலை 21ம் தேதி தொடங்கி 2026 ஆகஸ்ட் 16ம் தேதி முடிவடையும் இந்த சுற்றுப்பயணத்திற்கு 2 டெஸ்ட் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அப்ரார் அகமது மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார். எனவே, அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்ட பின்னரே அவர் பதிவு செய்திருக்க வேண்டும். இருப்பினும், தி ஹண்ட்ரட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இன்னும் 50-50 சதவீதமாகவே உள்ளது.
ALSO READ: பாகிஸ்தான் வீரரை ஒப்பந்தம் செய்த சன் குழுமம்.. பிசிசிஐ தரப்பில் விளக்கம்!
அப்ராரை வாங்குவதற்கான காரணத்தை சொன்ன டேனியல் வெட்டோரி:
அப்ரார் அகமது ஏலம் எடுத்ததற்கான காரணத்தை விளக்கிய வெட்டோரி, ”எங்கள் அணியில் அடில் ரஷீத்தை சேர்க்க முடியவில்லை. அதன் பிறகு, எங்கள் அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஒரே எண்ணம். அதன் பிறகு, அந்தத் தரமான பந்து வீச்சாளர் இருப்பதைக் கண்டோம், பின்னர் நாங்கள் வெளிநாட்டு வீரர்களை நோக்கித் திரும்பினோம். அப்ரார் அகமது, உஸ்மான் தாரிக் மற்றும் ரியாத் உசேன் ஆகியோர் எங்கள் இலக்காக இருந்த பந்து வீச்சாளர்கள் ஆகும்” என்றார்.