தை அமாவாசை 2026.. என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது..
வாய்ப்பு மற்றும் வசதி உள்ளவர்கள் வீட்டில் அந்தணர்களை அழைத்து வேள்வி போன்ற சடங்குகளை நடத்தலாம். எப்படிச் செய்தாலும், முக்கியமானது வழிபாட்டை தவற விடக்கூடாது என்பதே. பலருக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. வீட்டில் சாமி கும்பிட்டு விளக்கு ஏற்றிய பிறகா முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும் என்றால், அதற்கு விடை தெளிவானது.

தை அமாவாசை: என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது
தை மாதம் தொடங்கியவுடன் இல்லங்களில் ஆன்மீகச் சூழல் அதிகரிக்கிறது. தை மாதம் என்பது பண்டிகைகளாலும், நல்ல நிகழ்வுகளாலும் நிறைந்த ஒரு சிறப்புமிக்க காலமாகும். இந்த தை மாதத்தில் மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுவது தை அமாவாசை ஆகும். அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நாள். எந்த நல்ல காரியமாக இருந்தாலும், முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்த பிறகே அதை தொடங்க வேண்டும் என்பது நம் மரபாக இருந்து வருகிறது. அதனால் தான் அமாவாசை நாளுக்கு மிகுந்த ஆன்மீக மதிப்பு வழங்கப்படுகிறது.
இதையும் படிக்க: தை அமாவாசை 2026.. உங்கள் தடைகள் நீங்க.. இதை செய்ய தவறாதீர்கள்..
அதிகாலையில் முன்னோர்களை வழிபடலாம்:
மார்கழி மாதம் தேவர்களுக்கு இரவு காலமாகவும், தை மாதம் உதய காலமாகவும் கருதப்படுகிறது. தக்ஷிணாயனம் முடிந்து, உத்ராயணம் தொடங்கும் இந்த காலத்தில், முன்னோர் வழிபாடு செய்வது மிகச் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. அதனால் தை அமாவாசை, மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் முக்கியமானதாக கருதப்படுகிறது. எளிய வார்த்தைகளில் கூறினால், இரவு முடிந்து பகல் தொடங்கும் காலம் தை மாதத்தில் ஆரம்பமாகிறது. மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்தத்திற்குரிய காலமாகக் கருதப்படுகின்றது. அந்த பிரம்ம முகூர்த்தத்திற்குப் பிந்தைய காலமான தை மாதத்தில், புதிய விடியல் தொடங்குகிறது. இந்த விடியற்காலத்தின் அடையாளமாகவே பொங்கல் பண்டிகையும், சூரியனை வழிபடும் மகர சங்கராந்தியும் கொண்டாடப்படுகின்றன. இந்த காலப்பகுதியில், முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது.
வீட்டில் எளிமையாக தர்ப்பணம் செய்து வழிபடலாம்:
தை அமாவாசை நாளில் வீட்டிலேயே முன்னோர் வழிபாடு செய்தாலும், கோவிலுக்குச் சென்று தர்ப்பணம் செய்தாலும், அந்த நேரத்தைச் சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுவாக தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்களில் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று தர்ப்பணம் செய்வது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வழக்கம் உள்ளவர்கள் வாய்ப்பு இருந்தால் அவ்வாறு செய்யலாம். ஆனால், அது அனைவருக்கும் சாத்தியமாக இல்லாவிட்டால், வீட்டிலேயே எளிமையாக முன்னோர் வழிபாடு செய்வதும் முறையான வழிபாடாகவே கருதப்படுகிறது. வீட்டில் தர்ப்பணம் செய்யும்போது, பயன்பாடில்லாத இடத்தில் அல்லது சிங்கில் நீரை ஊற்றுவதன் மூலமும் முன்னோர் வழிபாட்டை நிறைவேற்றலாம். வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் வசிப்பவர்களும், தங்களுக்கான சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
முதலில் முன்னோர் வழிபாடு, பின்னர் தெய்வ வழிபாடு:
வாய்ப்பு மற்றும் வசதி உள்ளவர்கள் வீட்டில் அந்தணர்களை அழைத்து வேள்வி போன்ற சடங்குகளை நடத்தலாம். எப்படிச் செய்தாலும், முக்கியமானது வழிபாட்டை தவற விடக்கூடாது என்பதே. பலருக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. வீட்டில் சாமி கும்பிட்டு விளக்கு ஏற்றிய பிறகா முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும் என்றால், அதற்கு விடை தெளிவானது. முதலில் குளித்து தூய்மையுடன் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும். அதன் பின்னரே வீட்டுத் தெய்வங்களுக்கும் விளக்கு ஏற்றி வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க : தை அமாவாசை 2026: யார் என்ன செய்ய வேண்டும்? விரத முறை.. முழு விவரம்!!
வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது:
மேலும், அமாவாசை நாளில் வாசலில் கோலம் போடுவது தொடர்பாகவும் குழப்பம் உள்ளது. மரபுப்படி, அமாவாசை தினங்களில் வாசலில் பெரிய கோலங்கள் போடுவது தவிர்க்கப்படுகிறது. செம்மண் அல்லது அலங்கார கோலங்களுக்கு பதிலாக, மிக எளிமையாக ஒரு இரண்டு கோடுகள் இட்டால் போதுமானது என்பதே வழக்கம். இந்த வகையில், தை அமாவாசை என்பது கால மாற்றத்தையும், முன்னோர் வழிபாட்டின் ஆழ்ந்த ஆன்மீக அர்த்தத்தையும் உணர்த்தும் ஒரு முக்கியமான நாளாக விளங்குகிறது.