Aadi Friday: ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு.. இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
2025 ஆம் ஆண்டின் ஆடி வெள்ளிக்கிழமைகள் ஜூலை 18, 25 மற்றும் ஆகஸ்ட் 1, 8, 15 ஆகிய தேதிகளில் வருகின்றன. ஆடி மாதம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது; வெள்ளிக்கிழமை பராசக்தி வழிபாட்டிற்கு உகந்தது. ஆடி வெள்ளியில் வழிபாடு செய்வதால் எதிர்மறை சக்திகள் அகன்று, ஆரோக்கியம், செல்வம், அறிவு, செழிப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

ஆடி வெள்ளிக்கிழமை
பொதுவாக வருடத்தின் 365 நாட்களை கணக்கில் கொண்டாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மதத்தினருக்கும் மிக முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது. இந்து மதத்தைப் (Hindu Religion) பொறுத்தவரை தமிழ் நாட்காட்டி, திதிகள் அடிப்படையில் கணக்கிடப்படுவதால் ஒவ்வொரு நாளாக விஷேச நாளாகவே உள்ளது. அந்த நாட்கள் ஏதேனும் ஒரு மாதத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் செவ்வாய், வெள்ளி ஆகிய இரு தினங்கள் ஆன்மிக சிந்தனை நிறைந்த நாளாக இருக்கும். மற்ற நாட்கள் இல்லாவிட்டாலும் இந்த 2 நாட்களும் அனைத்து வீடுகளிலும் இறை வழிபாடு கண்டிப்பாக இருக்கும். இப்படியான நிலையில் ஆடி மாதத்தை எடுத்துக் கொண்டால் இதில் வரும் செவ்வாய், வெள்ளி ஆகிய இரு தினங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமை சிறப்புகள் பற்றிக் காணலாம்.
2025 ஆம் ஆண்டின் ஆடி வெள்ளிக்கிழமைகள்
நடப்பாண்டு ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதி வியாழக்கிழமை பிறக்கிறது. அப்படி பார்த்தோமேயானால் 2025 ஜூலை 18, ஜூலை 25, ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 8, ஆகஸ்ட் 15 ஆகிய 4 வெள்ளிக்கிழமைகள் வருகிறது.
இதன் சிறப்புகள் தெரியுமா?
பொதுவாக ஆடி மாதம் ஆன்மீக மாதம் என அனைவராலும் அழைக்கப்படுகிறது. அப்படி இருக்கும் நிலையில் மற்ற மாதங்களில் வெள்ளிக்கிழமை பராசக்தியின் அவதாரங்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பெண் தெய்வங்களுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அவற்றிற்கெல்லாம் ஒரு படி மேலாக மிகவும் முக்கியத்துவம் மட்டுமல்லாமல் சக்தி வாய்ந்த ஒரு நாளாகவும் பார்க்கப்படுகிறது.
Also Read: 2025 ஆடி மாதப் பிறப்பு எப்போது? .. அதன் முக்கியத்துவம் தெரியுமா?
ஆடி வெள்ளி கொண்டாட்டம் என்பது பருவமழையின் தொடக்கத்தை குறிப்பதாகவும் உள்ளது. மேலும் இந்த நாளில் வழிபட்டால் நம்மையும், குடும்பத்தினரையும் சுற்றியுள்ள எதிர்மறை சக்திகள் அனைத்தும் அகலும் என்பது நம்பிக்கையாகும். அது மட்டுமல்லாமல் ஆரோக்கியம், செல்வம், அறிவு மற்றும் செழிப்பு ஆகியவற்றில் நற்பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல செய்திகளும் வந்து சேரும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இந்த நாளில் வீட்டில் மட்டுமல்லாது அருகில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்தால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நாம் செய்த தவறுகளால் கோபமடைந்த அம்மனை சாந்தப்படுத்தும் வகையில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்யலாம் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
Also Read: லட்சுமி தேவி ஆசீர்வாதம் வேண்டுமா? – இரவில் இதெல்லாம் செய்யுங்க!
பொதுவாக ஆடி வெள்ளிக்கிழமை என்பது நாகங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகவும் பார்க்கப்படுகிறது இந்நாளில் நாகதோஷத்தால் அவதிப்படுபவர்கள் பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்தால் உகந்த பலன்களை பெறுவார்கள் என கூறப்படுகிறது. எனவே இத்தகைய நாளில் வழிபாடு செய்து அதற்கேற்ற பலன்களை பெற ஆன்மிக அன்பர்கள் அறிவுறுத்துகின்றனர்.
(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையிலான இந்த தகவல்களுக்கு எவ்வித அறிவியல்பூர்வ விளக்கமும் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)