வக்ர நிலையில் சனி.. தீபாவளி நாளில் இந்த 4 ராசிக்கு லக்!
Diwali Astrology: 2025 தீபாவளியில் சனி பகவான் வக்கிரம் அடைகிறார். 500 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் இந்த அரிய கிரக மாற்றம், மிதுனம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய 4 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை வழங்கும். நிதி முன்னேற்றம், தொழில் வெற்றி, கடன் நிவர்த்தி, இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி என பல நன்மைகள் இந்த தீபாவளி முதல் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜோதிடப்பலன்
ஜோதிட சாஸ்திரத்தில் நவக்கிரகங்களின் செயல்பாடு தான் அடிப்படையான ஒன்றாகும். இதனை மையப்படுத்தியே 12 ராசிகள், 27 நட்சத்திரங்களுக்குமான பலன்கள் கணிக்கப்படுகின்றன. இத்தகைய நவக்கிரகங்கள் அவ்வப்போது தனது பாதையில் பல்வேறு மாற்றங்களை உண்டாகும். இது சாதாரண நாட்களில் மட்டுமல்லாமல் விசேஷ நாட்களிலும் நவக்கிரக மாற்றங்கள் இருக்கும். அந்த வகையில் தீபாவளி நாடு முழுவதும் அனைத்து மக்களும் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகை அனைத்து மதத்தினராலும் மிகவும் விரும்பப்படுகிறது. 2025ஆம் ஆண்டு தீபாவளி அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த தீபாவளி பண்டிகை பலருக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். ஏனென்றால் இந்த பண்டிகை நாளில் சனி வக்கிரமாக இருக்கப் போகிறார். இதன் காரணமாக, நான்கு ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தீபாவளி பண்டிகைக்கு அனைத்து கிரகங்களும் ஒரு சிறப்பு நிலையில் இருக்கப் போகின்றன என்று கூறப்படுகிறது. மேலும், கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்குப் பிறகு, தீபாவளி பண்டிகை நாளில் சனி வக்ரமாக இருக்கும். இதன் மூலம், அதன் விளைவு 12 ராசிகளின் மீது இருக்கும் என்றாலும், நான்கு ராசிகள் மட்டுமே இதனால் மிகப்பெரிய அளவில் பலன்களைப் பெறும் என்று கூறப்படுகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம்.
இதையும் படிங்க: ஒரு எலுமிச்சை போதும்.. வாழ்க்கையில் இவ்வளவு பிரச்னை தீருமா?
சனி வக்கிர நிலையால் பலன்பெறும் ராசிகள்
மிதுனம்: ஜோதிட சாஸ்திரத்தில் மூன்றாவதாக உள்ள மிதுனம் ராசிக்காரர்கள் தாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியிலும் வெற்றி பெறுவார்கள். எதிர்பாராத வருமான அதிகரிப்பு அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். அதேபோல், புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல நேரமாக அமையும். கூட்டுத் தொழிலும் ஒன்று சேரும். செல்வம் சேமிக்க தொடங்குவீர்கள். பண முதலீடு நிச்சயம் லாபம் தருமாறு இருக்கும்.
தனுசு: தீபாவளி பண்டிகையின் போது சனி பகவானின் வக்ர நிவர்த்தி காரணமாக, இந்த ராசிக்காரர்களின் வருமானம் எதிர்பாராத வகையில் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் சேர்ந்து வரும். கடன் பிரச்சனைகள் நீங்கும். எதிர்பாராத பெரிய தொகை பணமாக கிடைக்கும். இல்வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். உள்ளேயும் வெளியேயும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
இதையும் படிங்க: தீபாவளிக்குப் பின் இந்த 4 ராசிகளுக்கும் நல்ல நேரம் பிறக்கும்!
மகரம்: மகர ராசிக்காரர்களிடம் இருப்பதெல்லாம் தங்கம் தான் என சொல்லும் அளவுக்கு அமோகமாக இருக்கும். தீபாவளி நாளில் சனி பகவான் வக்ர நிவர்த்தி செய்வதால், அவர்கள் திட்டமிட்ட அனைத்து பணிகளையும் முடிப்பார்கள். நீண்ட காலமாக வீட்டில் சுப நிகழ்ச்சிகளைக் கொண்டாட விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். இணையருடன் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். வருமான தேவை பூர்த்தியாகும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு தீபாவளியிலிருந்து நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது. அவர்கள் என்ன செய்ய முடிவு செய்தாலும் அதைச் செய்து முடிக்காமல் ஓய மாட்டார்கள். நிதி ரீதியிலான வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இது அற்புதமான காலமாக இருக்கும். குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது, ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இந்த நேரம் அவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)