Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உங்களின் குலதெய்வம் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

குலதெய்வம் கனவில் வந்தால் அது நல்ல அறிகுறி என சாஸ்திரங்கள் கூறுகின்றன. வீட்டில் சுப நிகழ்ச்சிகள், தொழில் வளர்ச்சி, நீண்டகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கிறது. குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், கோயிலுக்குச் செல்ல முடியாத சூழலில் கனவு வழியாக அது நம்மைத் தொடர்பு கொள்ளும் எனவும் சொல்லப்படுகிறது.

உங்களின் குலதெய்வம் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?
குல தெய்வம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 16 May 2025 14:11 PM

பொதுவாக இறை வழிபாட்டில் அனைவருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை இருக்கும். தெய்வங்களாக சொல்லப்பட்டுள்ள உருவங்கள் தொடங்கி ஞானிகள் வரை பலரையும் கடவுளாக நாம் பாவித்து வணங்கி வருகிறோம். இந்து மதத்தைப் பொறுத்தவரை எத்தனையோ கடவுள்கள் பல்வேறு அவதாரங்களிலும், வெவ்வேறு பெயர்களிலும் வெட்டவெளி இடங்கள் தொடங்கி பிரமாண்டமான மண்டபங்கள் வரை குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நம்மில் பலருக்கும் ஒவ்வொரு தெய்வம் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும். அதேசமயம் நீங்கள் மற்ற தெய்வத்தை வழிபடாவிட்டால் பிரச்னையில்லை. ஆனால் குலதெய்வத்தை கண்டிப்பாக வழிபட்டாக வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. நம்முடைய குலத்தைக் காத்து குடும்பத்தின் காவல் அரணாய் இருக்கும் அந்த தெய்வத்தை வீட்டின் பூஜையறை மட்டுமல்லாமல் கோயில்களுக்கும் குறைந்தப்பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது.

இப்படியான நாம் காணும் கனவின் மீது பலருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும், பயமும் இருக்கும். இது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நம் வாழ்க்கையைச் சுற்றியுள்ள விஷயங்கள் கனவாக மாறி காட்சிகளாக விரிவதாக கனவு அறிவியலானது சொல்கிறது. இப்படியான நிலையில் குல தெய்வம் கனவில் வந்தால் என்ன நடக்கும் என்பது பற்றி சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம்.

கனவில் வந்தால் என்ன நடக்கும்?

பொதுவாக குலதெய்வம் கனவில் வந்தால் நம் அனைவருக்கும் மனதில் ஒரு குழப்பமும் பயமும் ஒருசேர எழலாம். எதற்காக திடீரென்று குலதெய்வம் நம்முடைய கனவில் வருகிறது. ஏதேனும் நல்ல செய்தி சொல்ல வருகிறதா? அல்லது நாம் ஏதேனும் வேண்டுதல் வைத்து நிறைவேற்றாமல் இருக்கிறோமா? என்ற அச்சம் நம்மிடையே உண்டாகும். இதனைப் பற்றி பெரியவர்களிடம் கலந்து பேசி இருப்போம். ஆனால் சாஸ்திரப்படி குலதெய்வம் கனவில் வந்தால் அவை நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

இதனால் வீட்டில் விரைவில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் என்பது அர்த்தமாகும். அது மட்டுமின்றி தொழிலில் நல்ல வளர்ச்சியும் வருமானமும் பெறுவார்கள் என்பதை அதிகமாக உள்ளது. மேலும் நீங்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருக்கும் காரியம் வெற்றி பெற்று உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

அது மட்டுமல்லாமல் சில நேரங்களில் நம்முடைய பணி, தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவை காரணமாக நாம் குலதெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படலாம் அப்படியான பட்சத்தில் நம்மை காண விரும்பும் குலதெய்வம் கனவில் வந்து அதனை அறிகுறியாக சொல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படியாக கனவில் வரும் போது நீங்கள் மனதில் நினைக்கும் காரியம் அனைத்தும் நல்லபடியாக முடியும் என்றும், வாழ்க்கையில் இருந்த குழப்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும் என்றும் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

எனவே குலதெய்வ விஷயத்தில் நீங்கள் விளையாட்டாக செயல்பட வேண்டாம். வருடத்திற்கு ஒருமுறை நேரில் சென்றும், மற்ற நாட்களில் வீட்டிலேயே குலதெய்வத்தை தவறாமல் வழிபட்டு வந்து அதன் பலன்களை இரட்டிப்பாக உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் வழங்குங்கள் என சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

மே மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும் - அரசு!
மே மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும் - அரசு!...
8 மாதத்தில் 42 கிலோ குறைத்தேன்... டீடோட்டலரா மாறிட்டேன் - அஜித்
8 மாதத்தில் 42 கிலோ குறைத்தேன்... டீடோட்டலரா மாறிட்டேன் - அஜித்...
ஐபிஎல் 2025 சீசனில் ஸ்டார்க்கிற்கு ரூ.3.5 கோடி அபராதம்!
ஐபிஎல் 2025 சீசனில் ஸ்டார்க்கிற்கு ரூ.3.5 கோடி அபராதம்!...
மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு? - விசாரணை தீவிரம்!
மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு? - விசாரணை தீவிரம்!...
EPFO : தவறாக இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடியை நீக்குவது எப்படி?
EPFO : தவறாக இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடியை நீக்குவது எப்படி?...
ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் 100/100 - அமைச்சர் விளக்கம்!
ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் 100/100 - அமைச்சர் விளக்கம்!...
AK 64 படத்தின் ஷூட்டிங் எப்போது? நடிகர் அஜித்தே கொடுத்த அப்டேட்!
AK 64 படத்தின் ஷூட்டிங் எப்போது? நடிகர் அஜித்தே கொடுத்த அப்டேட்!...
மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வேண்டுமா? - இந்த விஷயத்தை கைவிடுங்க
மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வேண்டுமா? - இந்த விஷயத்தை கைவிடுங்க...
கடக ராசிக்கு செல்லும் செவ்வாய்.. இந்த 6 ராசிக்கு செம லக்!
கடக ராசிக்கு செல்லும் செவ்வாய்.. இந்த 6 ராசிக்கு செம லக்!...
யூடியூபை விளம்பரங்கள் இல்லாம பார்க்கணுமா? இதை டிரை பண்ணுங்க!
யூடியூபை விளம்பரங்கள் இல்லாம பார்க்கணுமா? இதை டிரை பண்ணுங்க!...
சிவகார்த்திகேயனின் பராசக்தி தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு!
சிவகார்த்திகேயனின் பராசக்தி தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு!...