உறவினர்களிடம் சொல்லக்கூடாத 3 விஷயங்கள்.. அப்புறம் கஷ்டம் தான்!

சாணக்கிய நீதியின் படி, நம் வாழ்வில் சில விஷயங்களை உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இதனால், தேவையற்ற பிரச்சனைகள் மற்றும் மோசமான தகவல் பரவலைத் தவிர்க்கலாம். நிதி ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் பாதுகாப்பாக இருக்க இந்த ரகசியங்களைப் பாதுகாப்பது அவசியம் என சொல்லப்படுகிறது.

உறவினர்களிடம் சொல்லக்கூடாத 3 விஷயங்கள்.. அப்புறம் கஷ்டம் தான்!

சாணக்ய நீதி

Published: 

15 Aug 2025 11:47 AM

வாழ்க்கையில் நாம் வாழ பல விஷயங்கள் தேவைப்படுகிறது. இவை அனைத்தும் நம்மை இயக்கும் செயல்பட வைக்கும் கருவியாக உள்ளது. ஆனால் அவை நம் அச்சாக என்றைக்கும் இருக்கக்கூடாது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும், பாசிட்டிவான எண்ணங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் இருக்கும். அப்படியான நிலையில் நாம் சில விஷயங்களை செய்யாமல் தவிர்க்க வேண்டும் என ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்ய நீதியில் தெரிவித்திருக்கிறார். அதன்படி குடும்பத்தினர், உறவினர்கள், பணம், வெற்றி, தோல்வி என பல விஷயங்களை சாணக்கியர் விளக்கியுள்ளார். அதேபோல், ஒருவர் வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என நினைத்தால் எந்த சூழ்நிலையிலும் சில விஷயங்களை நம் உறவினர்களிடம் சொல்லக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். அதனைப் பற்றிக் காண்போம்.

என்னென்ன விஷயங்கள் தெரியுமா?

வாழ்க்கையில் பல பிரச்னைகளுக்கும் காரணமாக சில நேரங்களில் பணம் அமைந்து விடுகிறது. ஒரு நபர் எந்த சூழ்நிலையிலும் தன்னிடம் உள்ள பணத்தைப் பற்றி தனது நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ சொல்லக்கூடாது. இது பின்னர் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மிக முக்கியமாக, உங்களிடம் உள்ள பணத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொன்னால், அந்தப் பணம் உங்களிடம் இருக்காது என்று சொல்லப்படுகிறது. பணம் இருப்பது தெரியும் பட்சத்தில் உதவி என்ற பெயரில் சிலர் மோசடி செய்ய நினைப்பார்கள். சிலர் பொறாமை கொள்வார்கள். சிலர் நம்மை நஷ்டம் ஏற்படுத்த செய்வார்கள். எப்போதும் உங்களின் பண இருப்பு பற்றி வெளியே சொல்லாதீர்கள். முடிந்தவரை முடியும், முடியாது என்பதை மட்டும் தெரிவியுங்கள்.

Also Read: Chanakya Niti: வாழ்க்கையில் இந்த 5 பேருக்கு கடன் கொடுக்காதீர்கள்.. சிக்கல் உண்டாகும்!

இதேபோல், சிலர் தங்கள் கடன்கள் மற்றும் நிதி பிரச்சனைகளைப் பற்றி மன வருத்தத்தில் மற்றவர்களிடம் பேசுவார்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் உங்கள் நிதி பிரச்சினைகள் மற்றும் கடன்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லக்கூடாது என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். இது நல்ல பழக்கமல்ல என்றும், கண்டிப்பாக உறவினர்கள் வழியாக எதிர்மறை தகவலாக செல்லக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இது நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அதேபோல், என்றைக்கும் தங்கள் சக்திக்கு மீறி பணம் கடன் வாங்கக்கூடாது. இதனால் நிம்மதி போய்விடும். கடனை அடைக்க வேண்டும் என குடும்பத்தினரையும் பார்க்க மறந்து விடுவீர்கள் என்று கூறப்படுகிறது.

Also Read: வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!

குடும்பப் பிரச்சனைகளைக் கூட எந்தச் சூழ்நிலையிலும் மற்றவர்களிடம் சொல்லக்கூடாது. ஏனென்றால், நீங்கள் அவ்வாறு செய்தால் உங்கள் குடும்பத்தின் கௌரவத்தை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தமாகும். நீங்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், பணம், அந்தஸ்து இல்லை என்றாலும் உங்கள் குடும்பப் பிரச்சனைகள், நிகழ்வுகளை மூன்றாம் நபருக்கு சொல்லக்கூடாது எனவும் சாணக்கியர் அறிவுறுத்தியுள்ளார்.

(சாணக்ய நீதி அடிப்படையிலான இந்த கட்டுரை தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)