வீட்டில் பட்டாம்பூச்சி ஓவியம்.. இவ்வளவு பலன்கள் இருக்குதா?
Feng Shui Vastu Tips: அழகிய பட்டாம்பூச்சி ஓவியங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலையும் மகிழ்ச்சியையும் உருவாக்கும். ஃபெங் சுய் படி, இவை உறவுகளில் அன்பையும் நெருக்கத்தையும் அதிகரிக்கின்றன. குழந்தைகளின் அறையில் வைத்தால் தன்னம்பிக்கை பெருகும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள், வளர்ச்சி கிடைக்கும் என நம்பப்படுகிறது.

வாஸ்து டிப்ஸ்
இயற்கையில் பட்டாம்பூச்சிக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அழகான பட்டாம்பூச்சிகள் கம்பளிப்பூச்சிகளிலிருந்து உருமாறுகின்றன. பட்டாம்பூச்சி அழகு மற்றும் மகிழ்ச்சியின் சின்னமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான், பட்டாம்பூச்சி ஓவியம் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குவதாக நம்பப்படுகிறது. இது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வளர்ச்சியிலும் நேர்மறையான மாற்றங்களுக்கு உதவுகிறது. வீட்டு அலங்காரத்தின் ஒரு பகுதியாக பட்டாம்பூச்சி ஓவியம் சேர்க்கப்பட்டுள்ளது. ஃபெங் சுய் என்பது ஒரு பிரபலமான அறிவியல் விதிகளைக் கொண்டதாகும். இது வீடுகளிலும் அலுவலகங்களிலும் இனிமையான சூழ்நிலையை உருவாக்குவதற்கும் நேர்மறை ஆற்றலை உருவாக்குவதற்கும் பெயர் பெற்ற ஒரு பண்டைய சீன சாஸ்திரமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் வீட்டில் பட்டாம்பூச்சி ஓவியம் வைத்திருப்பது என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வரும் என்பது பற்றிக் காணலாம்.
இதையும் படிங்க: வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியின் 7 அறிகுறிகள் – எப்படி கண்டுபிடிப்பது?
பட்டாம்பூச்சிகள் அன்பின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. அதனாக் வீட்டில் பட்டாம்பூச்சி ஓவியம் வைத்திருப்பது நெருக்கத்தை அதிகரிக்கிறது. இது உறவில் இனிமையை பராமரிக்கிறது. குடும்ப உறவில் மகிழ்ச்சி நிலையாக இருப்பதை உறுதி செய்கிறது. இல்வாழ்க்கையில் பிணைப்பை அதிகரிக்கிறது. பட்டாம்பூச்சி ஓவியங்கள் வீட்டிற்குள் நேர்மறை அதிர்வுகளைக் கொண்டுவருகின்றன. அவை ஒளி மற்றும் இனிமையான சூழ்நிலையை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.
குழந்தையின் அறையில் பட்டாம்பூச்சியின் படத்தை வைப்பது அவர்களிடம் தன்னம்பிக்கையையும் படைப்பு சிந்தனையையும் வளர்க்கும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் நிச்சயம் இதனை ஓவியமாக, பொருளாக வைக்கலாம். வீட்டு அலங்கார பொருட்களிலும் இவை பயன்படுத்தப்படுகிறது. பட்டாம்பூச்சி வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தையும் புதிய தொடக்கங்களையும் குறிக்கிறது. அதன் ஓவியத்தை வீட்டில் வைத்திருப்பது வாழ்க்கையில் வளர்ச்சியையும் புதிய வாய்ப்புகளையும் கொண்டுவருவதாக ஐதீகம் உள்ளது.
இதையும் படிங்க: வீட்டுல பிரச்னையா இருக்கா?; வாஸ்து குறைபாடு காரணமா இருக்கலாம்!
பட்டாம்பூச்சிகள் சுதந்திரமாக பறப்பதால், அவற்றின் ஓவியங்கள் வாழ்க்கையில் சுதந்திரத்தையும், விடுதலையையும் குறிக்கின்றன. அவற்றின் ஓவியங்கள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை ஈர்க்கின்றன. பட்டாம்பூச்சி ஓவியங்களை வீடு அல்லது அலுவலகத்தில் தெரியும் இடத்தில் வைக்க வேண்டும். உங்களுக்குப் பிடித்த வண்ணங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.
ஃபெங் சுய் வண்ணத்துப்பூச்சி ஓவியங்கள் வீட்டின் அழகை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உறவுகளுக்கு அன்பையும், குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும், வாழ்க்கைக்கு நேர்மறையையும் கொண்டு வருவதாக தெரிவிக்கின்றது. வீட்டில் ஒரு இனிமையான சூழ்நிலையை உருவாக்க விரும்பினால், அலங்காரத்தின் ஒரு பகுதியாக பட்டாம்பூச்சி ஓவியங்களைச் சேர்க்கவும்.
(ஆன்மிக மற்றும் வாஸ்து சாஸ்திர நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)