Astrology: பாபா வங்கா கணிப்பு.. 2025ல் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்!
பாபா வாங்காவின் கணிப்பை அடிப்படையாக கொண்ட ஜோதிடப் பலன்களின்படி, ஆடி மாதத்தில் மேஷம், துலாம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் செல்வ வளம் பெறுவார்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பண வரவு, துலாம் ராசிக்காரர்களுக்கு வருமான அதிகரிப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜோதிட சாஸ்திரங்களில் ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் நவக்கிரகங்கள் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. அதேசமயம் அத்தகைய ஜோதிடத்தில் மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைப்பதற்கு எதிர்காலத்தை கணித்து சொல்பவர்களும் மிக முக்கிய காரணமாக திகழ்கிறார்கள். அப்படியாக உலகளவில் பிரபலமாக திகழும் நபர்களில் ஒருவர் பாபா வாங்கா. அவர் இப்போது உயிருடன் இல்லை என்றாலும் எதிர்காலம் பற்றிய அவருடைய கணிப்பு பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. பெரும்பாலான விஷயங்களை அவர் ஏற்கனவே கணித்து தெரிவித்திருக்கிறார். இருப்பினும், பாபா வாங்காவின் ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் ஆடி மாதத்திலிருந்து அற்புதமான பலன்களைப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது. குறிப்பாக இவர்களின் செல்வ நிலையானது மாற்றம் கண்டு கோடீஸ்வரர்களாக மாறுவார்கள் என சொல்லப்படுகிறது.
செல்வ வளம் பெறப்போகும் ராசிகள்
- மேஷம்: பாபா வாங்கா ஜோதிட கணிப்பின்படி, மேஷ ராசிக்காரர்கள் ஆடி மாத தொடக்கத்தில் இருந்து அற்புதமான பலன்களைப் பெறுவார்கள் என சொல்லப்பட்டுள்ளது. அதிலும் மிக முக்கியமாக, இந்த ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் தங்களால் முடிந்த அளவு எதிர்பாராத வகையில் அதிக அளவு பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். மேலும், உங்களுக்கு இதுவரை நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் விரைந்தும், எளிதாகவும் முடிப்பீர்கள். எடுக்கும் அனைத்து விதமான முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
- துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதத்தில் வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் இதுவரை நிலுவையில் இருந்த மற்றும் இனிமேல் திட்டமிடும் அனைத்து வேலைகளும் சரியான நேரத்தில் முடிவடையும். அதைத் தவிர, வேலை முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வியாபாரத்தில் சில முக்கிய பிரச்சனைகள் மற்றும் அழுத்தங்கள் வந்து உடனே நீங்கும். நிதி பரிவர்த்தனைகள் நம்பிக்கைக்குரிய வகையில் நடைபெறும்.
- சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறிது காலமாகத் தொல்லை கொடுத்து வந்த உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து இந்த ஆடி மாதத்தில் விடுதலை கிடைக்கும். உள்ளும் புறமும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். அலுவலகங்களில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள்.
- தனுசு: பாபா வாங்கா ஜோதிட சாஸ்திர கணிப்பின்படி, ஜூலை மாத இறுதியில் இருந்து தனுசு ராசிக்காரர்கள் தொடும் அனைத்தும் தங்கமாக மாறும் அளவுக்கு மாற்றம் நிகழும். நீண்ட காலமாக ராசிக்க்காரர்கள் சந்தித்து வந்த அத்தனை பிரச்சனைகளும் நீங்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் வார்த்தைக்கு சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். வருமான பல வழிகளில் பெருகும்.
(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)