Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

Astrology: சிம்மத்தில் இணையும் கேது – செவ்வாய்.. இந்த 5 ராசிகள் கவனமா இருங்க!

சிம்ம ராசியில் செவ்வாய் மற்றும் கேது இணைவதால், மேஷம், மிதுனம், கடகம், கன்னி மற்றும் மீனம் ராசிகளுக்கு ஜூன் 7, 2025 முதல் 51 நாட்கள் வரை கடுமையான சவால்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும். தொழில், நிதி, உடல்நலம் மற்றும் குடும்ப வாழ்வில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பணம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Astrology: சிம்மத்தில் இணையும் கேது – செவ்வாய்.. இந்த 5 ராசிகள் கவனமா இருங்க!
ஜோதிடப்பலன்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 08 Jun 2025 15:00 PM

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சி, இணைவு உள்ளிட்ட செயல்பாடுகள் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. காரணம் 12 ராசிகள், 27 நட்சத்திரக்காரர்கள் என அனைவரது வாழ்விலும் தனித்தனியான சாதகம், பாதகம் இரண்டையும் கிரகங்களின் செயல்பாடு உண்டாக்கக்கூடும் என நம்பப்படுகிறது. இப்படியான நிலையில் தலைமை பண்பை இயல்பாக கொண்ட ராசியாக அறியப்படும் சிம்மத்தில் செவ்வாய் மற்றும் கேது பகவான் இணைகிறார்கள். இதனால் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் உண்டாகும் என சொல்லப்பட்டுள்ளது. அதில் மேஷம், மிதுனம், கடகம், கன்னி, மீனம் ஆகிய 5 ராசிக்காரர்கள் 2025, ஜூன் 7 ஆம் தேதி முதல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 51 நாட்கள் வரை இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.  அதனைப் பற்றிக் காணலாம்.

  1. மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கை பல பிரச்சனைகளை உண்டாக்கும் என கூறப்படுகிறது. இவர்கள் தங்கள் வாழ்க்கையில் தொழில் ரீதியாக பல பிரச்சனைகளை சந்திப்பார்கள் என சொல்லப்பட்டுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்கள் தொழில் அல்லது பணி இடங்களில் யாருடனும் வீண் பேச்சு, வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் வேலையை இழக்கும் அபாயம் வரை பிரச்னை செல்லலாம். அதைத் தவிர, பயணங்களின் போது மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
  2. மிதுனம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய், ராகு கூட்டு சேர்க்கையால் தாங்கள் நினைப்பதைச் தற்காலிகமாக செய்ய முடியாத அளவுக்கு தடை உண்டாகும். குறிப்பாக தொழில்துறையில் இருப்பவர்கள் நிறைய இழப்புகளைச் சந்திப்பார்கள். அதைத் தவிர, ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் ஜூன் 7 முதல் எந்த திட்டமாக இருந்தாலும் ஒதுக்கி வைப்பது நல்லது. மேலும் புதிய திட்டங்களைத் தொடங்காமல் தள்ளி வைக்க ஜோதிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்களுக்கும் மிக கவனமாக செயல்பட வேண்டும்.
  3. கடகம்: செவ்வாய் மற்றும் கேதுவின் இணைப்பால் இந்த ராசியில் பிறந்தவர்கள் பல நிதி சிக்கல்களைச் சந்திக்கும் சூழல் உண்டாகும். இவர்கள் கையில் எடுக்கும் எந்த வேலையையும் சொன்ன நேரத்தில் முடிக்க மாட்டீர்கள். கொடுத்த பணம் கிடைக்காவிட்டால் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால்தான் இந்த ராசியில் பிறந்தவர்கள் ஜூன் 7 முதல் 51 நாட்களுக்கு எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்குப் பணம் கொடுக்காமல் இருப்பது நல்லது என சொல்லபப்ட்டுள்ளது.
  4. கன்னி: இந்த ராசிக்காரர்கள் சிம்மத்தில் செவ்வாய் மற்றும் கேது இணைவதால் உடல்நலன் சார்ந்த பிரச்சினைகளைச் சந்திப்பார்கள். இது தவிர, வீட்டில் சண்டை சச்சரவுகள் காரணமாக மன அமைதியின்மை உண்டாகும். பல வழிகளில் பிரச்சினைகள் எழும் என்பதால் வீட்டிலும், வெளியிலும அனுசரித்து செல்வது நல்லது. மேலும் இந்த நேரத்தில் எந்த விஷயத்திலும் முடிவெடுக்க வேண்டியது என்றாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது.
  5. மீனம்: செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கையால் மீன ராசிக்காரர்களுக்கு பல நிதி சிக்கல்களை உண்டாக்கும். இது தவிர,நீங்கள் எந்த வேலையையும் செய்ய விரும்பினாலும் அதைத் தள்ளிப்போடுவது மிகவும் நல்லது. இல்லையென்றால் இழப்புகள் ஏற்படலாம். அதேபோல் மாணவர்கள் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் நிறைய யோசிக்க வேண்டும், இல்லையெனில் பிரச்சினைகள் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

(ஜோதிட மற்றும் ஆன்மிக நம்பிக்கையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது.இதற்கு அறிவியல் விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!...