2026ம் ஆண்டின் முதல் நாளே பிரதோஷம்.. உங்கள் கஷ்டங்கள் பறந்தோட நாளை இதை செய்தால் போதும்!!
2026 Guru Pradosham: நாளை (2026) புது வருடம் பிறக்கிறது. இந்தப் புது வருட நாளில் முதல் நாளே பிரதோசமும் சேர்ந்து வருகிறது. இதனால், நாளைய தினம் சிவன் கோவிலுக்குச் சென்று, சிவனை வழிபட்டால் அந்த வருடம் முழுவதும் அவருடைய அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

2026 வருடம் முதல் நாளே பிரதோஷம்..
2026ஆம் ஆண்டின் முதல் பிரதோஷ விரதம் ஜனவரி 1ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு பிறகு வரும் 13வது நாள், திரயோதசி திதி பிரதோஷ விரதம், பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது. இது சிவனுக்கும், பார்வதி தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான விரதங்களில் ஒன்றாகும். இந்த விரதம் திரயோதசி திதியில் (13வது சந்திர நாள்) சூரிய அஸ்தமன நேரத்தில் வரும் மாலை வேளையில் அனுஷ்டிக்கப்படுகிறது.
Also Read : கடவுள்களின் படங்களை டாட்டூ போடலாமா? வேதங்கள் சொல்வது என்ன?
‘குரு பிரதோஷம்’ என அழைக்கப்படுகிறது:
வியாழனன்று வரும் பிரதோஷம் “குரு பிரதோஷம்” என அழைக்கப்படுகிறது. வியாழனன்று வரும் பிரதோஷம் “குரு பிரதோஷம்” என அழைக்கப்படுகிறது. மார்கழி மாத வளர்பிறை திரயோதசி திதி ஜனவரி 1 அன்று அதிகாலை 1.47 மணிக்கு ஆரம்பித்து, அதே நாளில் இரவு 10.22 மணிக்கு முடிகிறது. பிரதோஷ காலம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஆகும். புராணங்களின் படி, இதே நேரத்தில் சிவபெருமான் உலகைக் காப்பதற்காக ஆலகால விஷத்தை அருந்தியதாக நம்பப்படுகிறது. அதனால், இந்த நேரத்தில் சிவனை வழிபடுவது மிகப் புனிதமானதாக கருதப்படுகிறது.
ஈசனை வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்:
குரு பிரதோஷ விரதத்தில் ஈசனை வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுபடலாம், ஆன்மீக விழிப்புணர்வு பெறலாம், நிம்மதி மற்றும் செழிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக வியாழக்கிழமை பிரதோஷம் பாவநிவர்த்தி செய்து, அறிவு, ஞானம், குருவின் அருள் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை நீக்குகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
பிரதோஷ நாளில் விரதம்:
பிரதோஷ நாளில் பலர் சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமன வரை விரதமிருந்து, பிரதோஷ நேரத்தில் சிவனை தரிசித்து பின்னர் விரதத்தை நிறைவு செய்கிறார்கள். நெய்தீபம் ஏற்றி சிவன் – பார்வதி தம்பதியை வழிபட்டு, பழம், பூ, இனிப்பு போன்றவற்றை நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம். சிவலிங்கத்திற்கு பால், தயிர், நெய், தேன், தண்ணீர் அல்லது பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்து, வில்வ இலைகளை சமர்ப்பிப்பதும் மிகுந்த புண்ணியம் அளிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
Also Read: ஆட்காட்டி விரல் எப்படி இருக்கு? உங்கள் ஆளுமை திறமை இதுதான்!
அருகில் உள்ள சிவன் கோவிலில் வழிபடுங்கள்:
நாளை உங்கள் வீட்டின் அருகில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று வில்வையிலைகளை மாலையாகக் கோர்த்துக் கொள்ளுங்கள். அதனை சிவனுக்கு சாற்றுங்கள். ஒரு நெய்தீபம் மட்டும் ஏற்றுங்கள். இதை மட்டும் செய்தாலே போதும். நாளை புது வருடத்தில் உங்களுக்கு எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும், அத்தனையும் தீர்ந்து செல்வ செழிப்புடன் வளருவீர்கள். இந்தப் பிரதோஷத்தைத் தவற விடாதீர்கள்.