Astrology: செப்டம்பர் 21ல் சூரிய கிரகணம்.. 12 ராசிகளில் நிகழும் மாற்றம்!
2025 செப்டம்பர் 21 அன்று நிகழும் சூரிய கிரகணம் கன்னி ராசியில் உத்தராடம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியாவிட்டாலும், ஜோதிட ரீதியாக 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகணத்தின் போது, ராசிகள் நிதி, உறவுகள், தொழில் போன்றவற்றில் சவால்கள் அல்லது வாய்ப்புகளை எதிர்கொள்ளலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Astrology Solar Eclipse
ஜோதிடத்தில் கிரகண நிகழ்வுகள் மிக முக்கியமானது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அப்படியான வகையில் 2025 ஆம் ஆண்டில் கடைசி சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் 21 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழுவுள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இருந்தாலும் ஜோதிடத்தின் படி இது ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகணம் கன்னி ராசியில் உத்தராடம் நட்சத்திரத்தில் நிகழும். கிரகணத்தின் போது, சூரியன் அதன் சொந்த ராசியான கன்னியில் பயணிக்கும். அதன் விளைவு 12 ராசிகளிலும் எதிரொலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு தெரியாது என்பதால் கிரகண சூதக காலம் செல்லுபடியாகாது. இருப்பினும், கிரகணத்தின் ஜோதிட விளைவு நிச்சயமாக ராசிகளின் மீது பிரதிபலிக்கும். அந்த வகையில் 12 ராசிகளிலும் என்ன நடக்கும் என்பது பற்றிக் காணலாம்.
ராசிகளில் கிரகணத்தால் ஏற்படும் மாற்றங்கள்
மேஷம் ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் தங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஊழியர்கள் அலுவலகத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். இருப்பினும், பொறுமை வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை உணருங்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு காதல் உறவுகள் மற்றும் கல்விக்கு இந்த கிரகணம் முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இதுவாகும்.மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு உங்கள் குடும்ப வாழ்க்கையில் சிறிது பதற்றம் ஏற்படலாம். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல்நலத்தில் அக்கறை கொள்ளுங்கள். பொறுமையாகவும் அமைதியாகவும் இருப்பது நல்லது.
கடகம் ராசியினர் கிரகணத்தின் தாக்கத்தால் தைரியமும் துணிச்சலும் அதிகமாக பெறுவார்கள். இந்த நேரம் பயணங்களுக்கு சாதகமாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் மேம்படும். சிம்மத்தில் பிறந்த நபர்களுக்கு நிதி விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தொழிலதிபர்கள் மட்டுமல்ல, எங்கும் முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், முதலீடுகளிலிருந்து விலகி இருங்கள். உங்கள் வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவது முக்கியமானதாகும்.
இதையும் படிங்க: செப்டம்பர் 21ல் சூரிய கிரகணம்.. கவனமுடன் இருக்க வேண்டிய 3 ராசிகள்
கன்னி ராசியில் பிறந்தவர்களே இந்த முறை சூரிய கிரகணம் உங்கள் ராசியில் ஏற்படும். எனவே, அதன் தாக்கம் அவர்களுக்கு அதிகமாக இருக்கும். அவர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் மன நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். துலாம் ராசியில் அவர்களின் செலவுகள் திடீரென்று அதிகரிக்கக்கூடும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இருக்கலாம். இருப்பினும், பணச் செலவு அதிகமாக இருக்கும்.விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு உங்கள் வருமானம் அதிகரிக்கக்கூடும். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும், நீங்கள் உறுதியுடனும் கடின உழைப்புடனும் வேலையை முடிக்க வேண்டியிருக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். அலுவலகத்தில் புகழும் கௌரவமும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கக்கூடும். மகரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் இருக்கும். ஆன்மீக பயணங்கள் செல்லும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் நிறைய செலவு செய்வீர்கள்.
இதையும் படிங்க: சூரிய கிரகணம் 2025: ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? இந்த பொருட்களை தியானம் பண்ணுங்க!
கும்பம் ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தின் தாக்கத்தால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். திடீர் நிதி ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.மீனம் ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையில் சிறிது பதற்றம் ஏற்படலாம். வணிக கூட்டாண்மைகளில் ஈடுபடும்போது கவனமாக இருங்கள்.
(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)