Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வைகுண்ட ஏகாதசி: உங்கள் வீட்டில் கட்டாயம் வாங்க வேண்டிய சில பொருட்கள்

Vaikuntha Ekadashi: வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் கடைப்பிடிக்கப்படும் சிறப்பு நாள். அன்றைய தினம் விஷ்ணுவை பக்தியுடன் வழிபட்டால் பாவங்கள் நீங்கி, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம், செழிப்பு, அமைதி கிடைக்கும் என்ற மத நம்பிக்கை நிலவுகிறது.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 Dec 2025 14:01 PM IST
வைகுண்ட ஏகாதசி என்பது வைஷ்ணவர்களுக்கும், விஷ்ணு பக்தர்களுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த திருநாள். இது மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி திதியாகும். இந்த நாளில் வைகுண்டம் எனப்படும் பரலோக வாசல் திறக்கப்படும் என்பது மத நம்பிக்கை. அதோடு, அன்றைய நாளில் விஷ்ணுவை வழிபட்டால், வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அகன்று, முன்னேற்றம் ஏற்படும். வருடம் முழுவதும் வரும் எல்லா ஏகாதசிகளையும் சரியாக கடைப்பிடிக்க முடியாதவர்களுக்கும், வைகுண்ட ஏகாதசி ஒரு அரிய வாய்ப்பாக கருதப்படுகிறது.

1 / 5
இந்த சிறப்பு நாளில் ‘சொர்க்க வாசல்’ எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படும். அதைக் காணும் அதிர்ஷ்டம் கிடைத்தால், மிகப்பெரிய புண்ணியம் அடையலாம் என்று நூல்கள் கூறுகின்றன. ஒரே ஒரு நாளாக இருந்தாலும், இந்த ஏகாதசி, ஆண்டில் வரும் அனைத்து ஏகாதசிகளுக்கும் சமமான பலனை அளிக்கும் என்பது மத நம்பிக்கை.

2 / 5
இந்த நாளில் சில பொருட்களை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால், விஷ்ணுவும் மகாலக்ஷ்மியும் அருள்புரிவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.அதன்படி, துளசி விஷ்ணுவிற்கு மிகவும் பிரியமானது. வீட்டில் துளசியை கொண்டு வந்து வைத்தால், வீட்டில் அதிர்ஷ்டமும் செழிப்பும் தங்கும் என்று கூறப்படுகிறது. மாதுளை பழம் விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்த பழமாக கருதப்படுகிறது. இதை நெய்வேத்தியமாக சமர்ப்பிப்பது சிறப்பான பலனை தரும்.

3 / 5
சுத்தமான தேன் மாதுளை பழத்துடன் கலந்து விஷ்ணுவுக்கும், மகாலக்ஷ்மி தாயாருக்கும் பிரசாதமாக படைக்கலாம். பச்சைக் கற்பூரத்தின் வாசம் வீசும் இடத்தில் விஷ்ணுவும் லக்ஷ்மியும் வாசம் புரிவார்கள் என்ற ஆகம நம்பிக்கை உண்டு. ஆகவே இது பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டில் பெருமாள், லக்ஷ்மி, ஸ்ரீராமர் தெய்வப்படங்களை வைத்து வழிபடுவது பாக்கியத்தை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. சுத்தமான பசு நெய் தீபம் ஏற்றுதல், பூஜையில் பயன்படுத்துதல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

4 / 5
சிறிய பாத்திரம் அல்லது உபயோகப் பொருள் கூட வாங்கி வைத்து பயன்படுத்துவது சுபபலனளிக்கும் என்று கருதப்படுகிறது. வெள்ளியில் மகாலக்ஷ்மி அல்லது நாணயம் வாங்கி வைக்கலாம். கட்டாயம் அல்ல; இயன்றால் வாங்கி வைத்தால் லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும். வைகுண்ட ஏகாதசி என்பது ஆன்மீக ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நாள். இந்த நாளில் விஷ்ணுவை பக்தியுடன் வழிபட்டு, தர்ம சிந்தனையுடன் நடந்து கொள்வது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று மதநூல்கள் கூறுகின்றன.

5 / 5