Wheat Flour Storage: கோதுமை மாவு இப்படி பயன்படுத்தாதீங்க! இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்!

Avoid contaminated Wheat Flour: கோதுமை மாவு ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் முக்கியப் பொருள். ஆனால், பழைய அல்லது தவறாக சேமிக்கப்பட்ட கோதுமை மாவு செரிமானப் பிரச்சனைகள், ஒவ்வாமை போன்றவற்றை ஏற்படுத்தும். இந்தக் கட்டுரை கோதுமை மாவைப் பாதுகாப்பாக சேமிப்பது, நல்ல தரமான மாவைத் தேர்ந்தெடுப்பது மற்றும் கலப்படம் இல்லாத மாவை வாங்குவது குறித்த முக்கியமான குறிப்புகளை வழங்குகிறது.

Wheat Flour Storage: கோதுமை மாவு இப்படி பயன்படுத்தாதீங்க! இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்!

கோதுமை மாவு

Published: 

29 Jun 2025 20:40 PM

 IST

ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் (Kitchen) கோதுமை மாவு (Wheat Flour) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் நீங்கள் தினமும் சாப்பிடும் கோதுமை மாவு, ஆரோக்கியமானதாக சிலர் கருதுகின்றனர். சர்க்கரை நோயாளிகள் அதிகளவில் சப்பாத்தி போன்றவற்றை சாப்பிட்டு தங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும், உங்கள் ஆரோக்கியத்திற்கும் கோதுமை மாவு தீங்கு விளைவிக்கும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? வீடுகளில் நீங்கள் நீண்ட நாட்களாக சேமித்து வைத்து பயன்படுத்தப்படும் கோதுமை மாவானது மெதுவாக நச்சுத்தன்மையாக மாறும். இதனால் உங்களுக்கு செரிமான பிரச்சினைகள், ஒவ்வாமை அல்லது வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியமான மாவை நச்சுத்தன்மையாக்கும் சில தவறுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

பழைய கோதுமையின் பயன்பாடு:

பலர் ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு கோதுமையை மொத்தமாக வாங்கி, நேரம் கிடைக்கும்போது அரைத்து விடுகிறார்கள். ஆனால், நீண்ட காலமாக சேமித்து வைக்கப்படும் கோதுமை பிரஸாக இருக்காது. அதேநேரத்தில், கோதுமை மாவில் எந்த ஊட்டச்சத்துக்களும் இருக்காது. தொடர்ந்து, கோதுமை மாவை நீண்ட நாட்களாக சேமித்து வைக்கும்போது கோதுமை மாவில் பூச்சிகள், பூஞ்சை அல்லது ஈரப்பதம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. இந்த மாவு உடலுக்கு பிரச்சனைகளை தரும். எனவே, எப்போதும் புதிய மற்றும் சுத்தமான கோதுமையைப் பயன்படுத்த வேண்டும்.

மாதக்கணக்கில் சேமித்து வைக்கக்கூடாது:

பலர் ஒரே நேரத்தில் அதிகப்படியான மாவை அரைத்து பல மாதங்களாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த முறை தவறான ஒன்று. கோதுமை மாவு காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இதனால் அது விரைவாக கெட்டுவிடும். நீண்ட நேரம் சேமித்து வைக்கப்படும் மாவில் பாக்டீரியாக்கள் படிந்து, அதன் ஊட்டச்சத்து குறைந்து பாக்டீரியாக்கள் வளரத் தொடங்குகின்றன. எனவே, புதிய மாவை எப்போதும் 15-20 நாட்களுக்கு ஒரு முறை அரைத்து, காற்று புகாத கொள்கலனில் உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.

கலப்பட மாவு:

சில நேரங்களில் கடைகளில் மலிவான மாவு கிடைக்கிறது. கடைகளில் கிடைக்கும் கோதுமை மாவு கலப்படம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில நேரங்களில் இதில் சுண்ணாம்புப் பொடி, மைதா அல்லது ஸ்டார்ச் கலக்கப்படுகிறது. இதுபோன்ற கலப்பட மாவை சாப்பிடுவது செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இது வாயு, அமிலத்தன்மை மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, எப்போதும் நம்பகமான கடையிலிருந்தும் நல்ல பிராண்டின் மாவையும் வாங்க வேண்டும்.

ஒரு பிளாஸ்டிக் கொள்கலனில் பாதுகாக்க வேண்டும்:

பல வீடுகளில், மக்கள் மாவை பிளாஸ்டிக் கொள்கலன்களில் சேமித்து வைக்கிறார்கள். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பிளாஸ்டிக் வெப்பம் அல்லது ஈரப்பதத்துடன் தொடர்பு கொள்ளும்போது, ​​அது நச்சு இரசாயனங்களை வெளியிடும். அவை மாவுடன் கலக்கின்றன. இது உடலில் நச்சுகளை அதிகரிக்கும். எனவே, கோதுமை மாவை பாதுகாப்பாக வைக்க எஃகு அல்லது கண்ணாடி கொள்கலனில் மாவை சேமித்து வைப்பது நல்லது.