கொதிக்கும் கோடை: சமையலறை வெப்பத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

Summer Kitchen Survival Guide: கடுமையான கோடை வெப்பத்தில் சமையலறையில் பணிபுரிவது சிரமமாக உள்ளது. கேஸ் அடுப்பு, மின் சாதனங்கள் வெப்பத்தை அதிகரிக்கின்றன. காற்றோட்டம், எக்சாஸ்ட் ஃபேன், வெளிர் நிற சுவர்கள், மதிய உணவை முன்கூட்டியே தயாரித்தல் போன்றவை வெப்பத்தைக் குறைக்க உதவும்.

கொதிக்கும் கோடை: சமையலறை வெப்பத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

சமையலறை

Published: 

22 Jun 2025 14:11 PM

கடுமையான கோடை வெப்பத்தில், இல்லத்தரசிகள் சமையலறைகளில் கடுமையான சிரமங்களை அனுபவிக்கின்றனர். கேஸ் அடுப்பு, குளிர்சாதன பெட்டி, மற்றும் பாத்திரங்கள் கூட வெப்பத்தை அதிகரிக்கின்றன. வெப்பம் காரணமாக வியர்வை, சோர்வு, தலைவலி போன்ற உடல்நல பிரச்சனைகள் உருவாகின்றன. காற்றோட்டத்தை அதிகரித்து, எக்சாஸ்ட் ஃபேன், ஜன்னல்கள் போன்றவை பயன்பட வேண்டும். மதிய உணவை காலையில் சமைத்து முடிப்பது, சாலட் போன்ற இலகு உணவுகளை தேர்வு செய்வது நல்லது. சமையலறையை வெள்ளை நிறத்தில் பூசுவதும், ஐஸ் பாட்டில்கள் வைத்து சூட்டைக் குறைப்பதும் உதவிகரமாகும்.

வெயிலில் சிக்கிய சமையலறை

கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே செல்லவே அஞ்சும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகியுள்ளது. பொதுமக்கள் எல்லோரும் ஏசி, மின் விசிறிகள் போன்ற சாதனங்களின் கீழ் தங்கியுள்ளனர். ஆனால், வீட்டு பெண்கள் சமையலறையில் பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தால் கொதிக்கும் சூட்டில் சிக்கி வருகிறார்கள். சமையலறை ஓவனாக மாறி, வியர்வை மழையாக கொட்ட வைக்கும் சூழ்நிலையில், உடல் சோர்வு, தலைவலி போன்ற சிக்கல்களும் ஏற்படுகிறது.

சமையலறையின் வெப்பம் ஏன் அதிகரிக்கிறது?

கேஸ் அடுப்பு மற்றும் சமையலறையில் உள்ள மின்சாதனங்கள், குளிர்சாதன பெட்டி, ஸ்டீல், அலுமினிய பாத்திரங்கள் போன்றவை வெப்பத்தை பெருக்குகின்றன. இதற்குடன் கோடை வெப்பம் சேரும் போது சமையலறையின் வெப்பநிலை வேகமாக அதிகரிக்கிறது. இதனால், வீட்டுப் பெண்கள் பிழைத்துக்கொள்வதே ஒரு சவாலாக மாறியுள்ளது.

வெப்பத்தை குறைக்கும் வழிகள் – பயனுள்ள ஆலோசனைகள்

1. காற்றோட்டம்

சமையலறையில் காற்றோட்டம் தொடர்ந்து இருக்க வேண்டும். சாயந்திர வேளையில் ஜன்னல்களை திறந்து வைக்கவும். சீலிங் ஃபேன், போர்டபுள் ஃபேன் அல்லது எக்சாஸ்ட் ஃபேனை இயக்கி சூட்டினை வெளியேற்றவும்.

2. மின்சாதனங்களை தவிர்க்கவும்

வெப்பம் தரும் வாஷிங் மெஷின் போன்ற சாதனங்களை பகலில் பயன்படுத்த வேண்டாம். ஃப்ரீஜ் மற்றும் ஓவன்களை திறந்து வைப்பதை தவிர்க்கவும். வெப்பத்தை அதிகரிக்கும் காரணிகளை குறைக்கவும்.

3. சூரிய ஒளி தடுப்பது

சமையலறையில் அதிக வெப்பம் நுழையாமல் இருக்க திரைச்சீலைகள் மற்றும் ஷாடோ ஃபிலிம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஜன்னல்களில் வெப்பநிலை குறைக்கும் கண்ணாடி பொருத்துவது நல்லது.

4. சமைக்கும் நேரத்தை மாற்றுங்கள்

மதிய உணவை காலையிலேயே சமைத்து வைக்கவும். அதோடு, தீமூட்டத் தேவையில்லாத உணவுகள் (சாலட்கள், சூப்புகள்) அதிகம் பயன்படுத்தலாம். வறுப்பு, பொறிப்பு போன்றவை வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால் தவிர்க்கவும்.

5. சமையலறையின் நிறம்

வெள்ளை போன்ற வெளிர் நிறங்களை சமையலறை சுவரில் பயன்படுத்துவது வெப்பத்தை பிரதிபலிக்க உதவுகிறது. இது அறையின் வெப்பநிலையை குறைக்க உதவுகிறது.

6. இயற்கை கூலிங்

உறைந்த தண்ணீர் பாட்டில்கள் அல்லது ஐஸ் பேக்குகளை சமையலறையில் வைத்தால், அவை சூட்டைக் குறைக்கும். இயற்கையான கூலர்களாக இது செயல்படலாம்.