Skin Care Tips: ஒரு வாரத்தில் வித்தியாசம்..! முக சுருக்கங்களை நீக்கும் 5 எளிய ட்ரிக்ஸ்..!

Reduce Facial Wrinkles: சுருக்கங்கள் முகத்தை வயதானதாகவும், மந்தமாகவும் காட்டும். பலர் அவற்றைப் போக்க பல்வேறு தோல் பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இந்த பொருட்களில் உங்கள் சருமத்தை சேதப்படுத்தும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. அதன்படி, இயற்கையான முறையில் சரி செய்யும் முறையை தெரிந்து கொள்வோம்.

Skin Care Tips: ஒரு வாரத்தில் வித்தியாசம்..! முக சுருக்கங்களை நீக்கும் 5 எளிய ட்ரிக்ஸ்..!

முக சுருக்கங்கள்

Published: 

25 Dec 2025 16:45 PM

 IST

வயதாகும்போது முகத்தில் சுருக்கங்களும், சருமத்தில் வறட்சியான கோடுகளும் தோன்றுவது இயல்பானது. இருப்பினும், பலருக்கும் முன்கூட்டிய முகத்தில் சுருக்கங்கள் (Wrinkles) ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, மோசமான உணவுப் பழக்கம், மோசமான வாழ்க்கை முறை பழக்கம், போதுமான அளவு தண்ணீர் அருந்துதல் (Drinking Water), புகைபிடித்தல் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளாலும் இது ஏற்படலாம். அதன்படி, சுருக்கங்கள் முகத்தை வயதானதாகவும், மந்தமாகவும் காட்டும். பலர் அவற்றைப் போக்க பல்வேறு தோல் பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இந்த பொருட்களில் உங்கள் சருமத்தை சேதப்படுத்தும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. எனவே, உங்கள் முகத்தில் சுருக்கங்கள் இருந்தால், சில எளிய வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் சருமத்தை மீண்டும் இளமையாகவும் மென்மையாகவும் மாற்றலாம்.

ALSO READ: குளிர்காலத்தில் அடிக்கடி சளி பிடிக்கிறதா? வராமல் இருக்க உதவும் குறிப்புகள்!

கற்றாழை:

கற்றாழையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ சருமத்தை ஆழமாக வளர்க்கின்றன. தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் ப்ரஷான கற்றாழை ஜெல்லை உங்கள் முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யலாம். இது முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கவும், உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை அளிக்கவும் உதவுகிறது.

முட்டையின் வெள்ளைக்கரு:

முட்டையின் வெள்ளைக்கரு சருமத்தை இறுக்குவதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி, காய்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இப்படி பயன்படுத்துவதன்மூலம் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் குறையும்.

தேன்:

தேன் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. அதே நேரத்தில், எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சருமத்தை மேம்படுத்த உதவுகிறது. ஒரு டீஸ்பூன் தேனில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம். 10-15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். இது உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடனும் இளமையாகவும் காட்டும்.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும் கொலாஜனை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. ஒவ்வொரு இரவும், சில துளிகள் தேங்காய் எண்ணெயை எடுத்து உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யலாம். இது சருமத்தை மென்மையாக்குவதுடன் படிப்படியாக சுருக்கங்களைக் குறைக்கிறது.

ALSO READ: குளிர்காலத்தில் சரும வறட்சி ஏன்..? சரிசெய்ய இயற்கை வழிகள் இதோ!

போதுமான அளவு தண்ணீர் குடித்தல்:

இது தவிர, நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், 7-8 மணிநேரம் தூங்குவதும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும், முன்கூட்டிய சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் தடுக்கிறது.

குப்பைத் தொட்டியில் கடந்த சீன துப்பாக்கி ஸ்கோப்.. விளையாட்டுப் பொருள் என விளையாடிய சிறுவன்!
‘ரஷ்ய இராணுவத்தில் சேர வற்புறுத்தப்பட்ட குஜராத் மாணவர்’ உக்ரைனில் இருந்து உதவிக்கோரி வீடியோ!
‘உங்கள் வாட்ஸ்அப் ‘ஹைஜாக்’ ஆகும் ஆபத்து’.. எச்சரிக்கும் சைபர் கிரைம்!
அடேங்கப்பா.. புர்ஜ் கலீஃபாவை மிஞ்ச தயாராகும் சவூதி அரேபியாவின் ஜெட்டா டவர்..