Shruti Haasan Recipe: ஸ்ருதிஹாசனின் சிம்பிளான காலை உணவு – எப்படி செய்வது?

Simple and Tasty Recipe : நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிப்பு, இசை ஆகியவற்றைத் தொடர்ந்து சமையல் கலையிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் எளிமையான காலை உணவு ஒன்றின் செய்முறையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Shruti Haasan Recipe: ஸ்ருதிஹாசனின் சிம்பிளான காலை உணவு - எப்படி செய்வது?

ஸ்ருதி ஹாசன்

Updated On: 

10 Jun 2025 22:56 PM

 IST

கமல்ஹாசனின் (Kamal Haasan) மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) தனது தந்தையைப் போலவே திரையுலகில் நடிகையாக நுழைந்தார். பாலிவுட்டில் தொடங்கிய அவரது பயணம் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் கூலி படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த்தின் மகளாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.  . தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். நடிப்பு, இசை போல சமையல் கலையிலும் தான் ஒரு மாஸ்டர் என அவர் நிரூபித்திருக்கிறார்.

தனக்கு நடிப்பு, இசை போல சமையலும் மிக பிடித்தமான ஒரு வேலை என அவர் பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார். அவ்வப்போது அவர் தனது குக்கிங் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அப்படி அவரது சமையல் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தனக்குப் பிடித்த ஆரோக்கியமான சிற்றுண்டி செய்முறையின் வீடியோவைப் பகிர்ந்துள்ள ஸ்ருதி, தான் சந்திக்கும் மக்களுடன் உணவையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்ற தலைப்பில் தெரிவித்துள்ளார். இது மிகவும் சுவையான ரெசிபி என்றும், தயாரிப்பதற்கு மிகவும் எளிதானது என்றும் ஷ்ருதி ஹாசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ருதி ஹாசனின் சாலட் ரெசிப்பி

 

தேவையான பொருட்கள்

வெங்காயம்
கேரட்
வெள்ளரிக்காய்
உப்பு
நல்லெண்ணெய்
சோயா சாஸ்
பூண்டு
இஞ்சி
மிளகாய்த்தூள்
உப்பு

எப்படி தயாரிப்பது?

முதலில் வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் தனியாக வைக்கவும். இதனுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மற்றொரு கிண்ணத்தில், சிறிது நல்லெண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சோயா சாஸ், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு இதை நீங்கள் முன்பே நறுக்கிய காய்கறிகள் மீது ஊற்ற வேண்டும்.  சிவப்பு மிளகாய் தூள், போதுமான உப்பு மற்றும் சிறிது வெள்ளை எள் சேர்த்து நன்கு கலக்கி பறிமாறலாம். ஸ்ருதி ஹாசனின் ஸ்பெஷல் சாலட் தயாராகிவிடும்.

ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தனது தந்தையின் தக் லைஃப் படத்தில் இடம் பெற்ற விண்வெளி நாயகா என்ற பாடலை பாடியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கார்த்திக் நேத்தா எழுதிய இந்த பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்தப் பாடல் படத்தின் ஹைலைட்டாகவும் அமைந்திருந்தது.

Follow Us
Related Stories
அடர்ந்த காட்டில் அழகான நீர் வீழ்ச்சி.. ஆர்ப்பரித்து கொட்டும் இரட்டை அருவி.. டால்பின் நோஸ் வியூ பாயிண்ட்.. நீலகிரியில் இப்படியொரு இடமா!
காலையில் பற்கள் துலக்கும் முன் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மை என்ன?
Kitchen Tips: குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் உணவு எப்போது கெட்டுப்போகும்?
கொளுத்தும் கோடை வெயிலுக்கு குட்பை.. சிலிர்க்க வைக்கும் சிறுவாணி நீர் வீழ்ச்சி.. ஒரே நாளில் ஒரு ஜாலி ட்ரிப்!
வெயில்காலத்தில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இதை ட்ரை பண்ணுங்க…
மேலும் ஒரு வருஷத்துக்கு நோ ‘மயோனைஸ்’.. தடையை நீட்டித்தது தமிழக அரசு.. அசைவ பிரியர்களுக்கு அடுத்த அடி!
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?
உலகின் உயரமான ரயில் பயணம்: கிங்ஹாய்–திபெத் பாதையில் ஆக்சிஜன் வசதியுடன் அசாதாரண அனுபவம்
பயங்கரவாதி குறித்து தகவல் தந்தால் 10 மில்லியன் பரிசு.. அமெரிக்க அரசு..
20 ஆண்டுகளுக்கு பின் அகற்றப்பட்ட Boeing 720 விமானம்.. நடந்தது என்ன?