Monsoon Kitchen Tips: மழைக்காலத்தில் சமைக்கும் பொருளை நாசம் செய்யும் ஈரப்பதம்.. பாதுகாப்பது எப்படி..?
Food Preservation Monsoon: மழைக்கால ஈரப்பதத்தால் சமையலறைப் பொருட்கள் கெட்டுப்போவதைத் தடுக்க, மாவு வகைகளில் பிரியாணி இலை, பிரட்டில் இஞ்சி, சர்க்கரையில் கிராம்பு, அரிசியில் கறிவேப்பிலை/வேப்பிலை சேர்க்கலாம். சமையலறையை சுத்தமாகவும், வறண்டதாகவும் வைத்திருப்பது, காற்றோட்டத்தை உறுதிசெய்வது, மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்துவதும் அவசியம்.

சமையலறை
மழைக்காலத்தின்போது (Monsoon) தரும் குளிர்ச்சியானது மக்களின் மனதையும் குளிர்ச்சியாக்கும். மழைக்காலத்தின்போது சமையலறையில் இருக்கும் பொருட்கள் சில கெட்டுப்போக தொடங்கும். இதற்கு காரணம், மழை நாட்களில் இருக்கும் ஈரப்பதமே ஆகும். இந்த ஈரப்பதம் சமையலறையில் (Food Preservation) இருக்கும் காய்கறிகள், மசாலாப் பொருட்கள் போன்றவற்றின் தன்மையை கெட செய்யும். இதை தடுப்பது எப்படி என்று தெரியாமல் பலரும் தவித்துகொண்டு இருக்கிறார்கள். நீங்களும் இதே போன்ற பிரச்சனையை எதிர்கொண்டால், அவற்றை தடுக்க விரும்பினால் கீழே கூறப்படும் விஷயங்களை பின்பற்றினால் போதுமானது. உங்களின் அத்தியாவசிய பொருட்கள் பாதுகாக்கப்படுவதுடன், ஆரோக்கியத்தை நமக்கு வழங்கும்.
மாவுகளை பாதுகாத்தல்:
மழைக்காலத்தில் சமையலறையில் இருக்கும் கடலை மாவு, கோதுமை மற்றும் மைதா போன்றவை பெரும்பாலும் பூச்சிகளால் பாதிக்கப்பட தொடங்கும். இது சமையல் திட்டத்தை கெடுக்கும். இது மாதிரி நடக்கக்கூடாது என்றால், பிரியாணி இலைகளை மாவு கொட்டு வைத்துள்ள சம்படத்தில் போடலாம். பிரியாணி இலைகளின் நறுமணம் பூச்சிகளை வரவிடாமல் தடுப்பதுடன், மாவை புதியது போல் வைத்திருக்கும்.
ALSO READ: சமையலறையில் ஸ்மார்ட்டா இருக்கணுமா? இதை செய்யுங்கள்…
பிரட்:
மழைக்காலத்தில் கடைகளில் வாங்கும் பிரட்களை எவ்வளவு பாதுகாப்பாக வைத்தாலும், அது சீக்கிரம் கெட்டுவிடும். இதை தவிர்க்க, பிரட் வைத்திக்கும் டப்பாகளில் ஒரு துண்டு இஞ்சியை வைக்கவும். இது பிரட்களை நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்கும்.
சர்க்கரை:
மழைக்காலத்தில் எறும்புகள் தங்களுக்கு தேவையான உணவுகளை சேமிக்க சர்க்கரை பாத்திரங்களை நோக்கி படையெடுக்க தொடங்கும். அப்படி இல்லையென்றால், ஈரப்பதத்தால் சர்க்கரை கட்டி சேர்ந்து கெட்டுப்போகும். இவற்றில் இருந்து பாதுகாக்க சில கிராம்புகளைப் போடலாம். இவை எறும்புகளை விலக்கி வைப்பது மட்டுமல்லாமல், சர்க்கரைக்குள் ஈரப்பதம் நுழைவதைத் தடுக்கும். இதனால், நீங்கள் சர்க்கரையை தாராளமாக பயன்படுத்தலாம்.
அரிசி:
பெரும்பாலும், அரிசி கொள்கலன்களில் பூச்சிகள் படையெடுக்க தொடங்கும். தைத் தவிர்க்க, நீங்கள் அரிசியில் கறிவேப்பிலை அல்லது வேப்பிலைகளை போடலாம். இது அரிசியை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்கும். அதன்படி, எப்போது வேண்டுமானாலும் எடுத்து அரிசியை பயன்படுத்தலாம்.
ALSO READ: ஸ்டீல் பாத்திரங்களை பயன்படுத்துகிறீர்களா? இந்த 5 உணவுகளை தவிருங்கள்!
பூச்சிகள் வராமல் தடுப்பது எப்படி..?
மழைக்காலங்களில் சமையலறையை சுத்தமாகவும், வறண்டதாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தினாலே, பெரும்பாலான பூச்சிகள் வருவதை தடுக்கலாம். இது மட்டுமின்றி, மழைகாலத்தில் இடை இடையே வெயில் அடிக்கும்போது, சமையலறையை நன்கு காற்றோட்டமாக வைத்திருங்கள். சமையலறையை சுத்தம் செய்ய உலர்ந்த மற்றும் சுத்தமான துணிகள் பயன்படுத்தவும், பூச்சிகளை ஈர்ப்பதைத் தவிர்க்க குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தவும். கூடுதலாக, பிரியாணி இலைகள், இஞ்சி, கிராம்பு அல்லது வேப்பிலை போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களை பூச்சிகள் மற்றும் ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்கலாம்.