Vegetables Cleaning: முட்டைக்கோஸில் இருந்து புழுக்களை அகற்றுவது எப்படி..? 3 எளிய ஹேக்குகள் இதோ!

Cabbage Cleaning Tips: முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் போன்ற இலை காய்கறிகளில் சிறிய பச்சை கம்பளிப்பூச்சிகள் அல்லது அஃபிட்ஸ் போன்ற காய்கறிகள் புழுக்களுக்கு ஆளாகின்றன. இந்த பூச்சிகள் பெரும்பாலும் இலைகளின் அடுக்குகளுக்கு இடையில் ஒளிந்து கொள்கின்றன. எனவே, சில நேரங்களில் அவற்றை தண்ணீரில் கழுவுவது மட்டும் போதாது.

Vegetables Cleaning: முட்டைக்கோஸில் இருந்து புழுக்களை அகற்றுவது எப்படி..? 3 எளிய ஹேக்குகள் இதோ!

முட்டைக்கோஸ் - காலிஃப்ளவர் சுத்தம் செய்யும் முறை

Published: 

10 Feb 2026 15:20 PM

 IST

கீரை, முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் (Cauliflower) போன்ற பச்சை காய்கறிகள் குளிர்காலத்தில் பரவலாக உட்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற காய்கறிகள் அதிகளவில் கடைகள் மற்றும் மார்க்கெட்களில் கிடைக்கின்றன. இருப்பினும், முட்டைக்கோஸ் (Cabbage) மற்றும் காலிஃப்ளவர் போன்ற இலை காய்கறிகளில் சிறிய பச்சை கம்பளிப்பூச்சிகள் அல்லது அஃபிட்ஸ் போன்ற காய்கறிகள் புழுக்களுக்கு ஆளாகின்றன. இந்த பூச்சிகள் பெரும்பாலும் இலைகளின் அடுக்குகளுக்கு இடையில் ஒளிந்து கொள்கின்றன. மேலும், இவை காண முடியாத அளவுக்கு சிறியவையாகும் இருக்கும். இந்த புழுக்கள் உள்ள காய்கறிகளை சாப்பிடுவது உடலுக்குள் தீங்கு விளைவிக்கும் கிருமிகளை கொடுக்கும். எனவே, சில நேரங்களில் அவற்றை தண்ணீரில் கழுவுவது மட்டும் போதாது. அதன்படி, கீரை மற்றும் காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து கிருமி நீக்கும் செய்வதற்கான எளிய வழிகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஆப்பிள் சாப்பிடுவதற்கு முன்பு எப்போதும் இதை செய்யுங்கள்.. இல்லையெனில் ஆரோக்கியத்திற்கு தீங்கு!

வெதுவெதுப்பான நீர் மற்றும் உப்பு:

உப்பு ஒரு சிறந்த இயற்கை கிருமி நாசிபி ஆகும். எனவே, இதை காய்கறிகளை சுத்தம் செய்ய எளிதாக பயன்படுத்தலாம். அதன்படி, ஒரு பெரிய பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி 2 டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய அல்லது முழுதாக முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் போன்ற இலை காய்கறிகளை இந்த நீரில் 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இப்போது, உப்பானது இலைகளில் மறைந்திருக்கும் எந்த பூச்சிகளையும் வெளியேற்றும். பின்னர் காய்கறிகளை 2 முறை சுத்தமான தண்ணீரில் கழுவவும்.

வினிகர் பயன்பாடு:

பாக்டீரியா மற்றும் சிறிய பூச்சிகளை கொல்ல வினிகர் பயனுள்ளதாக இருக்கும். இதில், ஒரு பங்கு தண்ணீரை ஒரு பங்கு வெள்ளை வினிகருடன் கலக்கவும். காய்கறிகளை இந்த கரைசலில் 5-10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இது பூச்சிகளை அகற்றுவது மட்டுமல்லாமல், காய்கறிகளில் பூச்சிக்கொல்லி தன்மையையும் குறைக்கும்.

பேக்கிங் சோடா கரைசல்:

காய்கறிகள் மீது பூச்சிகொல்லிகள் இருப்பதாக கவலைப்பட்டால், பேக்கிங் சோடா சிறந்தவை. ஒரு லிட்டர் தண்ணீரில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கரைக்கவும். இதில், கீரை அல்லது முட்டைக்கோஸை 10 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

ALSO READ: சத்தான காலை உணவு வேணுமா? இதை ட்ரை பண்ணுங்க!

காய்கறியை சரியான முறையில் சுத்தம் செய்வது எப்படி..?

  • முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் போன்ற இலை காய்கறிகளின் உட்புறத்தை சுத்தம் செய்ய, முட்டைக்கோஸின் மேல் 2-3 அடுக்குகளை எப்போதும் அகற்றவும். ஏனெனில், இந்த 3 அடுக்குகளின் மேல்தான் அழுக்குகள் மற்றும் பூச்சிகள் இருக்கும்.
  • அடுத்ததாக, முட்டைக்கோஸை 2 அல்லது 4 பெரிய துண்டுகளாக வெட்டி, பின்னர் சூடான நீரில் போட்டவும். இதனால், அடுக்குகளுக்கு இடையில் சிக்கியுள்ள பூச்சிகள் வெளியேறும்.
  • சூடான நீர் பயன்பாட்டுக்கு பிறகு, காய்கறிகளை ஒரு முறை சாதாரண நீரில் கழுவவும். இவ்வாறு செய்வது இலைகளை வாடுவதை தடுத்து, ப்ரஸாக வைக்கவும் உதவி செய்யும்.
லாட்டரியில் ரூ.49 கோடி ஜாக்பாட்… நண்பருடன் பரிசுத் தொகையைப் பகிர முடிவு செய்த கர்நாடக இளைஞர்
வாரத்தின் முதல் நாளே கடுமையாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?
யூடியூபின் Auto-Dubbing.. இனி கூடுதல் சிறப்புடன் பயனர்களுக்கு வழங்கப்படும்..
150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..